பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

59


கருத்து: அவன் தெளிவித்த பின்பும், தெளியாதே கலங்குவது ஏன்?

சொற்பொருள் : முள்ளி - நீர்முள்ளி, புள்ளிக் களவன் - புள்ளைகளையுடைய நண்டு. தெளிப்பவும் - நின் கவலைக்குக் காரணமாய பரத்தைமையைத் தாள் அறவே கைவிட்டதாக உறுதி கூறுவதன் மூலம், நின் மனத்துயரைப் போக்கித் தெளிவுகொள்ளச் செய்யவும். பசத்தல் - பொன்னிறங்கொள்ளல். முதுநீர் - என்றும் வற்றாதேயிருக்கும் பழைய நீர்; கட்டுக்கிடைநீர்' எனலும் ஆம்.

விளக்கம் : முள்ளியும் ஆம்பலும் நண்டும் நீரிடத்தேயுள்ளன. எனினும், நண்டானது தன குறும்பினாலே ஆம்பல் தண்டினை அறுத்தெறிந்து விளையாடிக் களிப்படையும் இயல்பு சொல்லப்பட்டது. அத்தகைய ஊருக்கு உரியவன் தலைவன் என்றனர். அவன்பாலும் அவ்வியல்பு உளதென்று உணர்த்தற்கு.

உள்ளுறை: களவன் ஆம்பலை அறுக்கும் 'தண்துறையூரன்' என்றது, அவ்வாறே,தலைவனும் தன்னுடைய கரை கடந்த காமத்தினாற் கொண்ட மடமையினாலே, இல்லறத்தின் இனிமையான மனைவாழ்வைச் சிதைத்தனன் என்பதாம். எனவே, தலைவி, அவன் தெளிப்பவும் தெளியா மருட்கையளாகித் தான் மெலிந்தனள் என்பதுமாம்.

மேற்கோள்: 'இறுதியடி இடையடி போன்று நிற்கும் அகப்பாட்டு வண்ண'த்துக்குப் பேராசிரியரும் (தொல், செய், 224); "ஆய் என்று இற்ற ஆசிரியம்" என யாப்பருங்கல விருத்தி உரைகாரரும் எடுத்துக் காட்டுவர்.(யா. வி. செய்.1 6.).

22. நீயேன் என்றது ஏனோ?

துறை: களவினிற் புணர்ந்து, பின்பு வரைந்துகொண்டு ஒழுகாநின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகிய தலைமகள், தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைவனின் பேச்சினை எடுத்துச் சொல்லி. அப்படி சொன்னது வேறு குறிப்பினாற்றானே? எனத் தன் தோழியிடம் கவலையோடு உசாவுகின்றாள் தலைவி.]