பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62

ஐங்குறுநூறு தெளிவுரை


[து வி : பரத்தையொருத்திமேற் கொண்ட காம மயக்கினால் மட்டுமே அவன் நின்னைப் பிரிந்தான் அல்லன். அங்கும் ஒருத்தியை உறவாடித் துய்த்தபின் கழித்துவிட்டு, மற்றொருத்தியைப் புதிது புதிதாகத் தேடிச்செல்லும் இயல்பினனே தலைவன் என்று தோழி தலைவிக்குச் சொல்கிறாள். தலைமகனின் ஏவலர் கேட்பச் சொல்லியதால், வாயில் மறுத்ததும் ஆம்.]

தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவெனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்,
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்

நலங்கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்?

தெளிவுரை: "அன்னாய்! தன் தாய்சாவத் தான் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டினோடு, தன் பிள்ளையையே தான் தின்னும் முதலையையும் உடையது அவன் ஊர். அவ்வூரவனான நம் தலைவன் இவ்விடத்தே இன்னமும் வந்தனன் இல்லையோ? அவன், தம் பொற்றொடிகள் ஒலிக்கத் தன்னைத் தழுவிய பெண்களின் நலத்தினைக் கவர்ந்துகொண்டு, பின் அவரைப் பிரிவுத்துயராலே வருந்தி நலனழியுமாறு கைவிடுவதுதான் எதனாலோ?"

கருத்து: நினக்கு மட்டுமே கொடுமை செய்தான் அல்லன்; தன்னைத் தழுவிய பெண்களை எல்லாம் நுகர்ந்தபின் அவர் வருந்தக் கைவிடுவதே அவன் இயல்பாகும். இதுதான் எதனாலோ? என்பதாம்.

சொற்பொருள்: 'தாய் சாப் பிறக்கும் களவன்' - தாய் சாவத் தான் பிறப்பெடுக்கும் நண்டு; 'கூற்றமாம் நெண்டிற்குத் தன் பார்ப்பு' என்பர் பிறரும் (சிறுபஞ். 11). 'பிள்ளை தின்னும் முதலை' - தன் பிள்ளையைத் தானே கொன்று தின்னும் முதலை; 'தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை எனப் பின்னும் கூறுவார் (ஐங். 41). மகிழ்நன் - மருதநிலத் தலைவன். தெளிர்ப்ப - ஒலிசெய்ய. நலம் - பெண்மை நலம். முயங்கியவர் - தழுவிய பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது.

விளக்கம் : தலைவனின் ஊர் எப்படிப்பட்ட அன்புச் செறிவை யுடையது தெரியுமர? தாள் பிறக்கத் தன் தாயையே சாகடிக்