பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



66

ஐங்குறுநூறு தெளிவுரை


கூறப்படும். வெள்ளைக் கரந்தை, சிவகரந்தை, தரையிற் படரும் சிறுகரந்தை போல்வன இதன் வேறுபல வகைகள். துணை - துணையாகிய பெட்டை. வள்ளை - வள்ளைக் கொடி. மென்கால் - மெல்லிய தண்டு. இன்னனாவது - இத்தன்மையன் ஆவது; இன்னான் ஆவது என்பதும் பாடம்.

உள்ளுறை: கரந்தைச் செறுவிலே துணைதுறந்து சென்ற களவன், மெல்லிய வள்ளைத் தண்டினை அறுத்து எறியும் என்றது. அவ்வாறே இல்லத்து மனையாளைத் துறந்து போயின தலைவன், பரத்தையர் மாட்டும் இன்புற்றுத் துறந்து அவரையும் வாடவிட்டு நலிவிக்கும் கொடுமையினைச் செய்வானாயினன் என்பதாம்.

ஈன்றணிமை உடையாளைத் துறந்து வாழ்தற்கு நேர்ந்த மனவெறுமையே, பரத்தையர் மாட்டுச் சென்றொழுகி, அவரை வருந்தச் செய்யும் கொடுமைக்குக் காரணமாயிற்றுப்போலும் என்பதும் ஆம். 'துணை துறந்து' போகாதிருப்பின், அக்கொடுமை நிகழாது போலும் என்பதும் கொள்க.

27. அல்லல் உழப்பது ஏனோ?

துறை : தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று' எனக் கருதி வருந்தும் தலைமகட்குத், தோழி சொல்லியது.


[து.வி.: தலைவன் வரவேண்டிய காலத்தே முறையாக இல்லத்திற்கு வந்தான் அல்லன்; அதனால், அவன் புறத்தொழுக்கத்தே புகுந்தான்' என்று நினைந்து வருந்துகின்றாள் தலைவி. அவளுக்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

செந்நலம் செறுவிற் கதிர்கொண்டு, களவன்
தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற்கு
எல்வளை நெகிழச் சாஅய்,

அல்லல் உழப்ப தெவன்கொல்?-அன்னாய்!

தெளிவுரை: அன்னையே! செந்நெல் விளையும் விளை வயலிடத்தே கதிரைக் கவர்ந்துகொண்டு செல்லும் நண்டானது, குளிர்ச்சியான உள்ளிடம் கொண்ட தன் மண்ணளையிடத்தே அதனோடு சென்று புகும் ஊருக்கு உரியவன்