பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

73


அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு, எழுநாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்,

தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே!

தெளிவுரை : 'தோழி, நீ வாழ்வாயாக. மகிழ்நன் ஒருநாள் நம் இல்லத்திற்கு வந்தானாக, அதற்கே, அவன் பெண்டிர், தீயிற் பட்ட மெழுகினைப்போல விரைய உள்ளம் உருகினராய் ஏழு நாள்ளவும் அழுதிருந்தனர் என்று சொன்னார்களே!'

கருத்து: 'யாம் அவன் பிரிவை ஆற்றும் திறலுடையேம்; ஆற்றாது உருகும் அவரிடத்தேயே சென்று அவன் தலையளி செய்வானாக' என்பதாம்.

சொற்பொருள்: 'நம்' - தனித்தன்மைப் பன்மை. என்ப - என்பார்; அசையும் ஆம். ஒன்றுக்கு ஏழென்று மிகுத்துக் கூறுதல் இலக்கிய மரபு (குறள் 1269). 'அவன் பெண்டிர்' என்றது பரத்தையரை. ஞெகிழ்தல் - உருகித் தளர்தல்.

விளக்கம்: 'ஒரு நாள் அவனைப் பிரிய நேர்ந்ததற்கே எழுநாள் உருகியழுது மெலிவர் அவன் பரத்தையர் என்பார்களே! ஆதலின், அவரிடத்தேயே சென்று, தலைவன் அவருக்கே மகிழ்வு தருவானாகுக' என்றது மனவெறுப்பாலே கூறியதாம். தன்போல் உரிமையற்றாரும், அவன் தரும் பொருளே கருதி அவனுக்கு இன்பம் அளிப்பாரும் ஆயினவரான பரத்தையர், அவ்வாறு நெஞ்சழிதல் இலர் என்பதே இதன் உட்கருத்தாம். பிறரிடத்தே தோன்றிய சிறுமை பொருளாகப் பிறந்த மருட்கை இது என்க.

33. தலைத்தலைக் கொள ஆடுவான்!

துறை: இதுவும் மேற்பாட்டின் துறையே யாகும்.

அம்ம வாழி,தோழி, மகிழ்நன்
மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரொ டாடும் என்ப; தன்

தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே!

தெளிவுரை: "தோழி! வாழ்வாயாக! மருதமரங்கள் மிகுந்தும் ஓங்கியும் வளர்ந்திருப்பதான இதழ்விரிந்த பூக்களை