பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



76

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: 'அவன் பொய்ப் பேச்சினை எல்லாம் வாய்ம்மையே எனக்கொண்டு மயங்குதல் இனியும் இலேம்' என்பதாம்.

சொற்பொருள்: 'ஆம்பல் நார் உரி மென்கால் நிறம்மாமைக் கவினின் நிறத்துக்கு உவமையாகலின். இதனைச் செவ்வாம்பல் தண்டு என்று கொள்க. 'மன்': கழிவிரக்கப் பொருளது. நற்றிணையிலும், 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால், நார் உரித்தன்ன மாமைக் கவின்' (நற். 6) என வருவது காண்க, கவின் - பேரெழில். பசந்தன்று - பசந்தது.

விளக்கம்: நாருரிக்கப் பெற்ற சிவப்பு ஆம்பலின் தண்டு, பேரெழிலும் ஒளியும் உடையதேனும், அதனைக் கவிந்து பேணிக் காக்கும் நாரினை இழந்தமையாலே விரைவில் அழகழிந்து வாடிப்போவது போல. அவன் செய்யும் கொடுமையால், என் மாமைக் கவினும் காப்பாரின்றிக் கெட்டது என்பதாம். மாமைக் கவின் - மாந்தளிரின் எழில் கொண்ட மேனியின் வனப்பு.

36. நாம் மறந்திருத்தலும் கூடும்!

துறை: 'தான் வாயில் நேரும் குறிப்பினளாயின்மை அறியாது தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால், அவட்குத் தலைமகள் நொல்லியது.

[து. வி.: தலைவன் பரத்தைமை ஒழுக்கத்துப் புறம்போனானாயினும், தலைவியால் அவனை மறக்க முடியவில்லை. தோழி வாயிலோர்க்கு இசைவு தருவதற்கு மறுத்துவிடத்து, அவள் தான் அவனை ஏற்கும் குறிப்பினளாதலைத் தெரிவிக்குமாறு சொல்லி, அத் தோழியிடம் தன்னுடைய மனநிலையையும் இவ்வாறு புலப்படுத்துகின்றனள்.]

அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே.
கயல்எனக் கருதிய உண்கண்

பயலைக்கு ஓல்கா வாகுதல் பெறினே.

தெளிவுரை : "தோழி வாழ்வாயாக! தலைவன் நம்மை மறந்து இருப்பவனாயின், கயல்போலும் மையுண்ட நம் கண்கள். அதுகுறித்துப் புசலை அடையாதிருப்பதற்கு வேண்டிய