பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


தாமே கொண்டுளம் தமிழாய் மணக்கும்
பாரியே இவரெனப் பண்புளார் போற்றும்
பாரி செல் லப்பரும் பதித்தே வழங்குவர்!
அவரருள், நன்றியால் அகந்தனிற் போற்றி,
அவர்நலம் வேட்பேன், அனைதமிழ்ப்பாலே!

கற்றறி புலவர்தம் களிமிகு விருந்தென
நற்றிறம் காட்டிநல் அச்சிலே தந்தவர்
தாதா தமிழ்க்கெனும் சாமிநாதய்யர்!
தாதா தமிழ்நலம் தாதா என்றே
தகைமிகு மவர்அடி தலைக்கொள் வேன்யான்!

தொகையெலாம் ஒருங்கே சுத்தமாம் பதிப்பென
ஒன்ருய்த் தந்தருள் உயர்வையா புரியார்
குன்றாத் தமிழுளம் குலவுமென் அகத்தே!
உரைக்கடல் ஒளவையாம் ஒப்பிலாச் சான்ருேர்
உரைத்தபே ருரைவளம் உவக்குமென் நெஞ்சே!

ஐங்குறு நூற்றின் அருந்திறன் அனைத்தும்
இங்குளம் கொளற்கிவை உதவிடப் புலவோர்
கற்றும் பேசியும் கட்டுரை வடித்தும்
சொற்றிறம் காட்டியும் சுவைத்தனர் பெரிதே!

அனைவரும் கற்றிதன் அருமை போற்றிட
நினைந்துசெய் தெளிவுரை இப்பதிப் பாகும்!

தமிழெனில் உவந்தே தாம்வர வேற்கும்
தமிழன் பர்க்கொரு தனிவிருந்தாகும்!

என்னுளத் திருந்தே இயக்கிடும் சக்தியாள்
தண்ணருள் என்பணி என்றிடும் தகையால்
பொன்னொளிர் அவள்பதம் போற்றி, யாண்டும்
செந்தமிழ் செழிக்கென வாழ்த்திப்
பைந்தமிழ் இந்நூல் பார்க்களிப் பேனே!

-புலியூர்க் கேசிகன்

சென்னை,

1-10-1982.