பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

"தமிழே உணர்வோ டொழுக்கமு மாதலால்

தமிழே தமிழர்க் குயிர்"

'என்று பிறந்தவள்’ என்று காலவரையாக எதனையும் வகுத்துக் கூறவியலாத தொல்பெரும் பழைமையோடு, 'என்றும் இளங் கன்னி' என்றபடி எழிலும் வளனும் ஒயிலும் பொருந்த விளங்குபவள் நம் செழுந்தமிழ் அன்னை. தமிழினத் தாரின் உயிர்ப்போடே உறவாடிக் கலந்துநின்று, தமிழினத்தின் வாழ்வையும் செவ்வியையும் வளமோடே பேணிக்காத்து, 'தமிழினம்' என்னும் போதிலேயே ஒரு பெருமித உணர்வு நம்மிடம் முகிழ்த்தெழச் செய்துவருபவளும், தமிழ் அன்னையே யாவாள்!

தமிழினத்தின் வழியிலே வந்துபிறந்த பெரும்பேற்றினைப் பெற்ற நமக்கு, கிடைத்தற்கரிய மிகப்பெருஞ் செல்வக் களஞ்சியமாகத் திகழ்வன தொல்காப்பியமும் எட்டுத்தொகை பத்துப்பாட்டென்னும் சங்கத் தொகைநூற்களும் ஆகும்.

அன்றைய உலகத்தின் பெரும்பகுதியினரான மக்களும் அறிவுநிலை பெறாதேயே வாழ்ந்துவந்த அந்தத் தொல்பழங் காலத்திலேயே, மொழிவளத்தைச் செப்பமாகப் பேணும் நினைவினை மேற்கொண்டு, நாடுமுழுதும் சிதறிக்கிடந்த சான்ருேரின் செய்யுட்களைத் தொகுத்து ஆராய்ந்து, முறை யோடே வகைப்படுத்தித்தந்த சிறப்பும் நம் தமிழ் முன்னேர் களுக்கே என்றும் உரியதாகும். போக்குவரத்துச் சாதனங் களும் அச்சுக்கருவிகளும் பல்கிப் பெருகியுள்ள இற்றை நாளினும், பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மிகமிகப் பலவாயுள்ள இற்றை நாளிலும் செய்ய நினையாத, செய்ய வியலாத மாபெருந் தமிழ்ப்பணியைத் தலைக்கொண்டு, அதனை