பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

97


நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத் தன்று, நின்

மலர்ந்த மார்பு-இவள் வய நோய்க்கே.

தெளிவுரை: நீரிலே வாழும் நீர்க்கோழியின் நிலநிறச் சேவலை, கூரிய நகங்களையுடைய அதன் பேடையானது, தன் வேட்கைமிகுதியாலே நினைந்திருக்கும் ஊரனே! இவளது வயாஅ நோய்க்கு, நின் மலர்ந்த மார்பானது, 'புளியங்காயின் வேட்கை போல' இராநின்றது.

கருத்து: இவள் நின்பால் எப்போதும் பெருங்காதலை உடையவளாவாள் என்பதாம்.

சொற்பொருள்: நீருறை கோழி - நீர்க்கோழி; இதனைச் சம்பங்கோழி என்றும் கூறுவர். வயாஅ - கருப்பமுற்றார் கொள்ளும் வேட்கைப் பெருக்கம்; சாம்பரைத் தின்பதும் புளியங்காய் அல்லது புளி தின்பதும் போல்வது; இதனைப் பிறர் தடுத்தாலும் அவரறியா வேளை பார்த்து மீண்டும் உண்ணற்கு விழைவதே இவர் அடங்கா வேட்கையின் இயல்பு ஆகும். உகிர் - நகம். புளிங்காய் - புளியங்காய்.

விளக்கம்: 'பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்' எனக் குறுந்தொகை (287) மகளிர்கொள்ளும் இவ் வேட்கையையும், 'வீழ்பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயா' எனக் கலி (40) பிற உயிரினம் இவ் வேட்கை கொள்ளலையும் காட்டும். 'மலர்ந்த மார்பு' என்றது. விரிந்தகன்ற மார்பு என்றற்காம். மலர்ந்த மலர் பலருக்கும் மணத்தையளித்து இன்புறுத்துதலே போலப் பலருக்கும் தழுவக்கொடுத்தலால் இனிமைதரும் மார்பு என்று உள்வைத்துக் கூறியதுமாம்.

உள்ளுறை : "நீர்க்கோழிப் பேடையும் தான் தன் வயா நோயால் துன்புறும் ஊரன்" என்றது. 'கருவுற்றிருக்கும் நின் மனைவியும் அவ்வாறு துயர்ப்படுதலை உடையாள்; நீதான் அதனை அறியாத மடமையாளன் ஆயினை' என்று மனைவி கருவுற்றிருத்தலைக் கூறி, அவன் உடனிராது பரத்தமை பேணித் திரிதற்கு இடித்துரைத்ததுமாம்.

பிறர் தடுப்பவும் அடங்காது. வயாவுற்ற மகளிர் புளியங்காயையே தின்பதற்கு வேட்கை மிக்கவராய்த், துடிப்போடு விளங்குதல் போல, நின் போற்ற ஒழுக்கத்தால் நின்னை

ஐங். - 7