பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



98

ஐங்குறுநூறு தெளிவுரை


வெறுத்து ஒதுக்குமாறு எம்போவ்வார் பலப்பல சொல்லியும், அவள்தான், என்றும் நின் மார்பையே நினைத்துச் சொரும் விருப்பினளாயினாள் என்று, அவளின் மாறாக்காதலின் கற்புச்செவ்வியை உணர்த்தியதும் ஆம்.

'புளிங்காய் வேட்கைத்து' என்றற்கு, அடையாவிடத்தும், அதனைப்பற்றிய நினைவே நாவில் நீர்ஊறச் செய்து, அச்சுவை யுண்டாற்போலும் மயக்கம் விளைப்பது போல, நின் மார்பும், இவள் அடையாத இப்போதும், நினையநினைய இன்பநினைவாலே இவளை வாட்டி மயக்குவதாயிற்று என்றதாகவும் கொள்க.

மேற்கோள்: 'புளிங்காய்' என, அம்முச்சாரியை பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல், உயிர்மயங்கு, 44).

நீருறை கோழி நீலச்சேவலை, அதன் கூருகிர்ப் பேடை நினைந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற் பயத்தவாகும். அதுபோல, நின் மார்பை நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளும் என்றவாறு. 'புளிங்காய் வேட்கைத்து' என்பது நின் மார்புதான் இவளை நயவாதாயினும், இவள் தானே. நின் தார்பை நயந்து, பயன்பெற்றாற்போலச் சுவைகொண்டு, சிறிது வேட்கை தணிதற்பயத்தள் ஆகும், புளியங்காய் நினைய மாய்நீர் ஊறுமாபோல' என எடுத்துக்காட்டி விளக்கமும் தருவர் பேராசிரியர் - (தொல். உவம. 25)

52. நின் தேர் எங்கே போகிறது?

துறை: வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது.

[து. வி. புலவியால் ஊடியிருந்த தலைவியின் மனத்தைத் தேளிவித்து, உறுதி பல கூறி, அவளுடன் மீண்டும் சேர்ந்திருந்தான் தலைவன். அவனுக்குத் தலைவியின் தோழி, அவனுடைய பழைய போற்றா ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லி நகையாடுவாள்போல, அவன் வீடகன்று புறப்படும் பொது சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய;

எவ்வாய் முன்னின்று - மகிழ்ந! - நின் தேரே?