பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 35. அம்ம வாழி தோழி நம்மூர்ப் பொய்கை யாம்ப ளுருரி மென்கால் நிறத்தினு நிழற்றுதன் மன்னே இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே. வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணங் கூறியவழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண், என் மேனி பசந்தது” எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பு-ரை :-தோழி, கேட்பாயாக. இதுகாறும் கம் மூரிற் பொய்கைக்கண் பூக்க ஆம்பலின் கார் உரிக்கப்பட்ட மெல்லிய கால்போல ஒளிர்தலைச்செய்த என் மாமைக்கவின், அது கழித்து, இம்பொழுதுதான். பசலே பாய்ந்தது, காண். علمائي و 7ة கார் உரி மென்கால் என்புழி வினைத்தொகை இறக்க காலம் கொக கின்றது. உம்மை, இசை கிறை. மன், கழிவுப் பொருட்டு. கோயின்றியன்ற யாக்கை கலமும், அழகு, திகழும் இளமை கலமும் ஒருங்கு திகழும் மகளிரது மேனி கிறம் மாமை யென்றும் சான்ருேரால் வழங்கப்பெறும். இம்மாமைக்கு, மழையால் கனத்து நீர் துளித்து கிற்கும் பச்சிளங் களினையும், நீலமணி பதித்த பொன்னேயும் உவமை கூறுவர் கொடுமு வீங்கை நெடுமா வந்தளிர், நீர்மலி கதழ் பெயல் தலைஇய, ஆய்கிறம் புரையுமிவள் மாமைக் கவினே' (நற். 205) என்றும், 'பூத்துனர், காதின் துவலே தளிர்

  • மகளிர்க்கு காணம் நிறை முதலியன அகாலமாய் நின்று சிறப்பிக்க, இம்மாமை, புறநலமாய் விளங்கி, அவர்க்கு இனிய சாயலே விளைவிக்கும் என்பர். இதனைப், பந்தாடி நின்ற விமலையின் அகப்புறகலங்களைச் சிறப்பிக்கப்புக்க கிருத்தக்கதேவர், பெண் பாலவர்கட் கனியாய்ப் பிரியாத தானும், திண்பால் நிறையும் திருமாமையும் சேர்ந்த சாயல் ' (சீவக. 1961) என்று கூறு மாற்றலறிக.