பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஐங்குறுநூறு மூலமும் முதலாவை மா எனப்படா' என்றனர். அடியார்க்கு கல்லார். கச்சினர்க் கினியரும், 'முதல்யும் சுருவும் மீளுதலின், மாவென்றல் மாபன்று' என்பர். இக்காலத்த உயிர் நூலறிஞர் சுருவின மீனினத்துட்கொண்டு, முதலயை மீன் என்ஞர். அவர்கள் ஆசிரியர் தொல்காப்பியனர் கூறியாக்கு முதலயைக் தவழ் வனவற்றுள் (Reptiles) வைக்கே ஆராய்வர். : ஒடுங்கிருங் குட்டக் கருஞ்சுழி வழங்கும், கொடுக்காண்முதலையும் இடங் கரும், காமும்” (குறிஞ். 256-1) என்பதன் உரையில், 'இவைமூன்றும் சாகிவிசேடம்' என்று கச்சினர்க்கினியர் கூறினர். இனி, இக்காலக் கறிஞர், முதலேவகை இருபதின் மேலுமுளவென்பர். இவை ஊனுண் வாழ்க்கைய (Flesh: eaters) goth, பெறலருமையான், பெரும்பாலும் மீனுண்டே வாழ்கின்றன . முதலேப்போத்து முழுமீ ஒரும்” (5) என இந்நூலுள்ளும் கூறுப. இம்முதலேகள் நீரிலும் கிலத்திலும் இயங்குவனவாகவின், அவ்வியக்கத்திற் கேற்பச் சூடுங்குளிர்ச்சியும் எப்துமாறு அவற்றின் உதிரம் அமைந்துளது. நீரின் அடியிற்போல கிலத்திலும் நடப்பதற் கேற்ப அவற்றின் கால்களும் அமைந்திருக்கின்றன. முதல் கள் முட்டையிட்டு வாழும் உயிர்வகை யாகும். இவை முறைக்கு இருபதுமுதல் நூறுவரை முட்டையிலும். ஈனுங் கால், சிலமுதலைகள், மண்ணிற்குழியொன் றகழ்ந்து, அதன் கண், தாம்சன்ற முட்ட்ைகளே வைத்து, மண்ணுலே மூடி, அவை பொரிக்குமளவும் புறந்தருதலுண்டு ; சில அக் குழியி னிடத்தே அடைகாப்பனபோல இருந்து, அமர்ந்துறையும். அக்குழியின் புறத்தே படையேர்ந்து தோன்றின், முட்டை பொரிக்குங் காலமாயிற்று என்று உணர்ந்து முட்டைகளே வெளியே கொணர்ந்துவிடும். பின்பு, அம்முட்டைகளைத் தம் முக்கின்கண் அமைந்த கூரிய வுறுப்பினுல், உடைத்துக் “All (crocodiles) are flesh-eaters, though from force of circumstances many have to live largely on fish”—Book of £nowledge.