பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/171

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 ஐங்குறுதுாறு மூலமும் (முதலாவது கல். வேட்கைத்து என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. லயவுறு மகளிர்க்குப் புனிவேட்கை சிறந்து கிற்கும் என்பது, வழக்கினும், சான்ருேர் செய்யுளிலும் காணப்படுகிறது. 'பசுப்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்' (குறுங். 287) எனச் சான்ருேர் கூறுதல் காண்க. வயா, வேட்கைப் பெருக்கம், பெரும்பாலும், இது, கருவுற்ற காலத்து உயிரினம் எய்தும் வேட்கை மேற்று : 'வீழ்பிடிக் குற்ற கடுஞ்சூல் வயா' (கவி. 40) என்பதலுைம் அறியப் படும். புளிங்காய், கினைந்தவழி, வாயில் நீரூறி, கினைத்தாாது வேட்கையைத் தணிவித்தல் போல, கின் மார்பிண் நினைத்த வழி, அஃது இவட்கு இன்பவுணர்ச்சி பயந்து, இவள் எய்திய வருத்தத்தைப் போக்கற்பாலதாகும்; இதுபோது அஃது அத னேச் செய்யாது, ஒருகாலைக் கொருகாலை பிரிவுணர்வும்,துன்ப மும் பயந்த வருத்துவ தாயிற்று என்றற்கு புளிங்காய் வேட் கைத் தன்று நின் மலர்ந்த மார்பு என்ருள். வயாவுற்ரு ரெய். தும் வேட்கையைத் தணிவித்தல் உரிமை புடையார்க்குத் தள்ளாக் கடப்பாடாதலைச் சுட்டி, இவள் வயாஅம் நோய்க்கு. என்று கூறினுள். விரிந்த பண்பிற் ருயிலும், இவள் எய்தும் வருத்தத்தைப் போக்கிய தில்லை எனத் தான் கருதிய தன முடித்தற்கு, 'மலர்ந்த மார்பு' என விசேடித்தாள். தலைவி காணுவகையில், தலைமகன் பிரித் தொழுகுங்கால், அவன் மார்பு புளிங்காய் வேட்கைத்தாயும், கண்டவழி, அவள் எய்தும் நோய்க்கு மருத்தாயும் வேட்கை தணிவிப்ப தொன்று. இதனைத் 'தண்கயத்துத் தாமரைள்ே சேவலைத் தாழ்பெடை, புன்கயத் தள்ளும் வயலூர-வ ண் க ய ம் , போலு கின் மார்பு புளிவேட்கைத் .ெ த ன் றி வ ள் மாலுமா ருநோய் மருந்து' (திணைமா 150 : 142) எனப் பிறர் கூறுமாற்ரு லறியலாம். இனி, கின் மார்பு, கின் புறத்தொழுக்கத்தால், இவள் கோய் தீர்க்கும் மருந்தாகா மையே யன்றி, கினேந்தவழிப் பொருமை தோற்றுவித்து