பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது வென், றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். (பொ. 290) என்பது உவமவியல். எனவே, மேனியிற் கிடந்து திகழும் இளமைாலமே ஈண்டு உவமங்கொள்ள கின்றத்ாம். திருக்கு தல், தன்னை வியந்து, பிறரெல்லாம் தன்னிற் சிறந்தா சல்ல செனச் செருக்கி மாறுபடுதல்; ஈண்டுத் தலைவி தன்னிற் சிறங் திலளென்பது படப் புறனுரைத்தல் மேற்று. உம்மைபிரித்துக் கூட்டப்பட்டது. இகி, கூந்தல். கருங்குழலின் அயலே கிடந்து சுடர்விட்டுத் திகழும் இயல்பிற் ருகலின், துதலே; ஒதி யொண்ணுதல்' என விசேடித்தார்; ' கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்” (குறுங். 129) என்று பிற சான்ருே ரும் கூறினர். பலரே என்புழி ஏகாரம் தேற்றம். பசப்பித் தோர், செயப்படுபொருண்மேல் கின்ற வினைப்பெயர். புறத்தொழுகிப் போத்த தலைவனுல் தலையளிக்கப்பட்ட நலம் புதியளாய பரத்தை, தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டுப் பொருதாளாய தலைமகள், அவன் முன்னின்று, அவளைக் கண்ணற இகழ்தலை நயவாதாள் போல, நீ இனிக் கொண்டோள்தன்னேடு கிகா என்னேடு கிகரிப் பெருகுலம் தருக்கும் என்ப' எனப் பிறர்மேல் வைத்துக் கூறினுள். இதனுற் பயன், " கின் புறத்தொழுக்கம் குலமகளிரைப் பரத்தையரோடு நிகர்ப்பித்து வருத்துவிக்கின்றது ' எனத் தலைவற்கு உணர்த்தியவாரும். ' பாத்தைபால் பன்குட் பிரிவின்றிக் கூடி யிருத்தலால், கினக்கு என்பால் அன்பின் மையும், அதற்கேதுவாக என்பால் நலமின்மையும், அவள் பால் நினக்கு அன்புண்மையும், அதற்கேற்ப அவள்பால் கலமுண்மையும் இனிது உணரப்படுதலின், அவ்வாற்றல், கினது அன்புநெறிக்கண், யான் அவளோடு ஒவ்வேனுயி னேன்,' என்பாள், தன்னுெடு நிகரா என்னெடு என்ருள். இனி, ' இதுபோது கின்னுற் கொள்ளப்பட்ட அவளது நலத்தை நோக்க, அவட்கு முன்னர்க் கொளப்பட்ட எனது நலம் முதும்ைத்தர்தலின், நாளும் புதுவோரை மேவும்: கினக்கு யான் அவளொப்பப் பெருகலம் உடைய்ேனல்