பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி 90. மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண்டனகொல் வண்டின் மாண்குண மகிழ்நன்கொண் (டான்கொல் அன்ன தாகலு மறியாள் i எம்மொடு புவக்குமவன் புதல்வன் ருயே தலைமகன் தன் மனைக்கட் செல்லாமல் தான் விலக்கு கின்ருளாகத் தலைமகள் கூறினுள் என்பது கேட்ட காதற் பரத்தை, தலைமகன் கேட்குமாற்ருல், அவட்குப் பாங்காயி ர்ை கேட்பச் சொல்லியது. பு: றை :-மகிழ்நனுடைய மாண்புற்ற குனங்களே வண்டுகள் அடைந்தனவோ? அன்றி, அவற்றின் மாண் குணங்களை அவன் அடைந்தனனே? செயலொற்றுமையால் வேறுபடுத் தறியக்கூடாமையின், அச்செயல் அவற்கு இயல் பாகலும், அதனுல் அவனே விலக்குத லாகாமையும் அறியா வாய், அவன் புதல்வற்குத் தாயாகிய தலைவி, யாம் அவனைத் தன்மனேக் கேகாவண்ணம் விலக்குகின்றே மென எம்மோடு புலக்கின்ருள் ; இஃதோர் அறியாமை இருந்தவாறு எ. று. மகிழ்நன் குணமாண்பு, நலம் புதியராய மகளிரையே கூடியொழுகுதல். வண்டின் மாண்குணம், எல்லாப் பூவி * லும் சென்று தாதுண்டல். ஏற்புடைய சொற்கள் எச்ச வகையால் வருவித்துக் கொள்ளப்பட்டன. அச்செயல்பற்றி அவனைப் பிறர் விலக்கலாகாமையும் எய்துவித்தலின், ஆக அம் என்புழி உம்மை எச்சப் பொருளதாம். அறியாள், முற்றெச்சம்; புலக்குமென்னும் வி னே மு. த ல் வினே கொண்டது. . . கலம் புதியளாய்ச் சிறக்கும் தன்பால் பிரிவின்றிக் கூடி யிருந்து இன்பதுகர்ச்சி எய்தும் தலைவன் செயல், தேனுடைப் புதுமலரைத் தேர்ந்து தேனுண்னும் வண்டின் செயலே.