பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


264 ஐங்குறுநூறு மூல்மும் (முதலாவக நிழன்முகி ரிவஞ்சிப் பழனத்ததுவே கழனித் தாமரை மலருங் கவின்பெறு சுடர்நுதல் தந்தை யூரே. வரைவிடை வைத்துப் பிரிந்த தலமகன் மீள்கின்ற்ன் சொல்லியது. ப. ரை- நுழை துணையொடு வதியு மென்றது வரைக் தெப்தியவழித் தலமகளோடு தான் ஒழுதும் இன்பவொழுக்கத் திண் கினேந்து கூறியவாறு. கழனித் தாமரை மலரும் என்றது, அவ்விடத்துத் தன்னக் கண்டு மகிழ்வார் முகமலர்ச்சி கூறிய விாது10. பு: ரை:-அழகுபெற்ற ஒளிவீசும் நெற்றியினையுடை யாட்குத் தந்தையினது, கழனிக்கண் தாமரை மலரும் ஊர், வீரர் போன்ற பெரிய கொம்பினேயுடைய எருமை, அவர்தம் மகளிர் போன்ற துணையாகிய பெண்ணெருமையோடு தங் கும் கிழல் சூழ்ந்த குளத்தருகேயுள்ள பழனத் திடத்த தாகும. எ. அ. எருமைக்கு வீரர் உவமையாதல், 'கார்ச்சே னிகந்த கரைமருங்கி னிர்ச்சேர்க், கெருமை யெழிலே நெறிபவர் சூடிச் செருமிகு மள்ளரிற் செம்மாக்கும்’ (கார். 40:31) என்றும், 'ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோக்து........ மூதூர்ப், போர்செறி மள்ளரிற் புகுதரு மூர்ன்” (அகம். 316) என்றும் சான்ருேர் கூறுமாற்ருல் தெளியப்படும். ஆண்ணீருமைக்கு மள்ளரைக் கூறினமையின், அவற்றின் துணைக்கு அவர்தம் மகளிரை உவன்மகூறினர். முதிர்தல், சூழ்தல்; பார்முதிர் பணிக்கடல் (முருகு 45) என்ருந் போல. தடங்கோடு, உரிச்சொல்முடிபு. பழனம், ஊர. வர்க்குப் பொதுவாகிய கிலம் என்ப.