பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 69 வளர்ச்சிக்கேற்ப, ஒடுகளும், காலந்தோறும் உகுதலும், பிறி தொன்று கோன்றுதலும் உண்டு. இவ்வண்ணம் ஒடுமாற்றும் இயல்பின ஆங்கிலத்தில் மோல்ட்டிங் (Moulting) என்று கறுப. புதிதாய்க் தோன்றும் ஒடு, முதற்கண் மென்மைக் தாயினும், நாளேற முதிர்த்து வலிதாம். தொல்லோடு நீங்க, புத்தோடு தோன்றி வ ன் ைம பெருக, - இடைக்காலம், அல்வனுக்கு அல்லற் காலமாகும். ஆகலின், அதுபோது அஃது எங்கேனும் பதுங்கிக் கிட்க்கும். தாயலவன் சினேயினுங் காலத்து, அதன் வாலின்கீழ் உள்ள சிறுமயிர்களில், அதன் சினேகள் ஒட்டிக்கொண்டு கிடந்து, பொரித்தவுடன், கெடிய வாலொன்றும், நீண்ட வுணரி யொன்றும் பெற்று, கண்டினத்தைச் சாராத புத்தின வுயிராப்த் தோன்றும். உயிர் நூற்புலவரையன்றி ஏனேயோர் அதனே நோக்கியவழி, ఆతా அலவன் பயந்த அன்புடைச் சினை யென அறிதல் இயலாது. அலவனது முழுவுருவமும் - அமைவதற்குள் அஃது அடையும் மாறுதல் பலவாகும். சினேபயர்த அலவன் உடல் சுருங்கிப்பின், முன்னே பினும் பருக்கல் வேண்டி, ஒடு மாற்றத் தொடங்கும். ஒடு கழன்ற அலவன், மெலிந்து, புத்தோடு பெற்று வன்மை பெறுங்கால், அதன்வாலில் ஒட்டிக் கிடந்த சினே, பொரித்துக் தாய்லவனே நீங்கும். சினே பயவாமுன் இருக்கநிலைமையின் வேருப், புத்தோடும் பருவுடலும் பெறுவான் புலர்ந்து ஒய்ந்து ஒடுங்கிக் கிடக்கும் கண்டு இறந்ததுபோலக் கோன்று தலின், ம்ே காட்டுப் பண்டைச் சான்ருேர், 'தாய் சாவப் பிறக்கும் புள்ளிக் கள்வன்'(ஐங்.24) என்பாாாயினர். ாம்காட்டில், இழிக்க மக்களுட்பலர் கண்டினே யுண்பர். மேனுட்டவரும் இதனைப் பிடித்துண்பர். கண்டுணவு எளிதிற் செரிக்காது என்று மருத்துவ நூலார் கூறுவர். - உயிர் வரலாறு கூறும் ஆசிரியன்மார், கண்டினம் உலகில் ஏறக்குறையப் பத்து நாருயிரம் (Ten millions)