பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை உரை

"மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் கருதுக்குறிஞ்சி கபிலன்-கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு."

என்னும் பழைய பாட்டினால் உணரலாம்.

இந்நூலை ஐந்து பகுதியாகப் பிரித்துப் பகுதி ஒன்றுக்குப் பத்துப் பாடல்களடங்கிய பத்துப் பத்தினை உட்பிரிவாக அமைத்து, ஒவ்வொரு தலைப்பிற்கும் கருப்பொருள் முதலியவற்றின் பெயரோடு இணைத்துப் பத்து எனப் பெயரிட்டுக் தொகுக்கிருக்கின்ற மறையைக் கூர்ந்து நோக்கின், இந்நூல் தொகுக்க ஆசிரியர் இத்தகைய நூலொன்றை உருவாக்க வேண்டுமென முன்னரே தம் முள்ளத்துட் கொண்டு, ஐந்திணைகளில் எவ்வெத் திணையை எவ்வெப் புலவர் பாடுவதில் வல்லுனர் என்பதனை ஆராய்ந்து அவ்வப் புலவர்களையணுகிப் பாடல் இயற்றச் செய்து, அவர்கள் புதிதாகப் பாடித் தந்தவற்றைக் கொண்டே இவ்விதம் இந்நூலைத் தொகுத்தனரோ எனக் கருதுதற்கும் இடமுண்டு.

இந்நூலைத் தொகுத்த ஆசிரியர் சங்கப் புலவராகிய புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் என்பார். தொகுப்பித்தோன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை என்னும் சேரவேந்தன் கூடலூர் கிழாரைச் சேரநாட்டுப் புலவர் என்பர் மகாமகோபாத்தியாய உ.வே. சாமிகாத ஐயரவர்கள். எனினும், தொகை நூல்களைச் சங்கத்துச் சான்றோர்களே தொகுத்தார்கள் என்பது பண்டைய உரையாசிரியர்கள்* உரைகளால் அறியப்படுகின்றமையின் இந்நூலை தொகுத்த இப் புலவர், சேரநாட்டவரே யெனிலும் சங்கப் புலவர் என்பதில் தடையில்லை. இப் புலவர் 'புலத்துறை முற்றிய' என்று சிறப்பிக்கப்படுகின் றமையின், இவர் இலக்கண இலக்கியக் கடலின் கரை கண்டவரே அன்றி நுண்ணிய பல கலைகளையும் கற்றுத் துறைபோயவர் எனறு கருதப்படு கின்றார். இப் புலவரின் நண்பனாகிய யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறந்த ஞான்று, இவர் இறங்கிப்

  • மலைபடுகடாம் 145-ஆம் அடி நச் - உரை பார்க்க.