பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐக்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்

  • ஆகல் அழற் குட்டம்* என்ற புறப் பாட்டினால் பொதுவான நூற் புலமையும், சோதிடக் கலைத்திறமையும் இத்தகைய வென்று அறியப்படும். இந் நூலைத் தொகுப்பித்ததினால் இச் சொல் அவன் முன்னோர் போலச் சந்த தமிழ்ப்பற்றும் புலமையும் வாய்ந்தவனென்று அறியலாம். இச்சேரன், பாண்டியன் தலையாலங் கானச் செருவென்ற நெடுஞ்செழியனோடு பொருது அவனும் தனிப்புண்டு பின்னர் ஏதோ ஓர் உபாயத்தால் அப் பிணின்றும் நீங்கித் தன்னோடு அடைந்த அரசு ஏறியவன் என்று புறப்பாடல்களால் தெரியவருகின்றது.

அகப்பொருள் நூல்களுள் திணை களை வைத்துக் கொள்ளும் முறையை ஆசிரியர் தொல்காப்பியர்,

"மேயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”

என்று முல்லையை முதலாகக் கொண்டு கூறுவர். சொல்லவும் படுமே என்ற எதிர்மறை உம்மையால் இம்முறையிற் அமைக்கவும் பெறும் என்பது புலப்படுகின்றமை தெரிகிறது. முல்லையை முதலாகக் கொண்ட முறைக்கு வேறாகவும் தொகைநூல்களிலும், கீழ்க்கணக்கிலும் அகப்பொருள் நூல்களில் திணைகள் கோக்கப்பட்டிருக்கின்றன. எனினும், இவ்ஐங்குறு நூறுபோல் களவு, கற்பு என்ற இருபகுதி இரண்டாவதான கற்புக்குரிய மருதத்திணையை முதற் வைத்து உணர்த்தும் நூல்கள் ஒன்றுமே இன்று இல்லை எனலாம். இங்ஙனம் கூடலூர்கிழார் மருதத்திணையை அதன் முதற்கண் வைத்துத் தொகுத்தது, இம்மருதத் திணையைச் சேர்ந்த 'வேட்கைப் பத்து' என்ற முதற்பகுதியுள் பத்துப்பாட்டுக்களிலும் தம் நாட்டுச் சேர வேந்தனாகிய ஆதன் அவினி என்பான் வாழ்த்திச்