பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்

வடதிசை முதலிய திசைகளினின்றும் இந் நாட்டிற்கு குடியேறியவர்கள் என்னும் கருத்துப்பட எழுதிச் சென்றுள்ளனர். அக் கருத்துக்களெல்லாம் தவறானவை என்றும் செந்தமிழியற்கை சிவணிய நிலம் என ஆசிரியர் தொல்காப்பியனார் சிறப்பித்த இத்தமிழகமே தொன்று தொட்டுத் தமிழர் பிறப்பகமாகும் எனவும் கருதுதல் பொருந்தும்

இத்தகைய பழைமை வாய்ந்த தமிழ்மக்களையும் தமிழ் மொழியையும் இக்காலத்துச் சிலர் திராவிடர் எனவும் திராவிடம் எனவும வழங்கி வருகின்றனர். தமிழ் மக்களையும் மொழியையும் குறிக்க வழங்கும் இப்பெயர்கள் சங்க இலக்கியங்களிலும் மற்றைய பண்டைய தமிழ்ச் சான்றோர் வழக்குகளிலும் யாண்டும் காணற்கரியதாம். இப்பெயர் வழக்குகள் பிற்காலத்திலெழுந்த ஒருசில நூல்களுள்ளேயே பயின்றுள்ளன.. திராவிடர் என்னும் இவ்வட சொற்குப் பொருள், ஓடி வளைந்து வந்தவர்கள் என்பதாகும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே இத் தமிழ் நாட்டில் தோன்றி வாழும் மக்களுக்கு இப்பெயர் பொருந்துமாறு எங்ஙனம் தமிழ் என்னுஞ் சொல்லைப் பலமுறை சொன்னாலே அமிழ்து என்னும் ஒலி விளைவதை உணரலாம். இங்ஙனம் இனிமை மிக்க அமிழ்தமான இமாழிக்கு வடமொழியாளர் இட்டு வழங்கிய திராவிடம் என்னும் பெயர் எத்தனை அடாத முரண்பட்ட பெயா் . அந்தோ அமிழ்தம் விடமாயிற்றே இதனோடமைந்து எல்லையிறந்த வட்மொழிப் பற்றுடையார் ஒரு சிலர் திராவிடம் என்னும் வடமொழிப் பெயரே திரவிடம், திமிள், தமிழ் என்று திரிந்து வந்ததென்றும் கூறித் தமிழர் அனைவரையும் தாம் பெற்ற மொழிக்குப் பெயருமிடத் தெரியாத அறிவிலிகள் என்ற பட்டத்தையும் சூட்டுவாராயினர். இங்ஙனம் கூறுவாரது கூற்று அறிவில் கூற்றாகும். தமிழகத்தில் மிகப் பழங்காலத்தே தோன்றிய ஒரு மொழி, வடவாரியர் வந்து பெயரிடும் வரை பெயரில்லாது ஏக்குற்றுக் காத்துக் கிடந்தது போலும் !