ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்
புறம் புறவினை அடுத்து, நிலத்தினை அகழ்ந்து நீர் நிற்க இடஞ்செய்து வரம்புகோலிச் செந்நெல்லும் கன்னலும் திணைகளை விதைத்து உண்டு திளைத்தனர். இந்நிலத்தின் மருதமென்னும் ஒருவகை மரம் வானுற ஓங்கி வளர்ந்தபால் அம்மரத்தின் பெயரால் இந்நிலம் மருதமெனப் பின்னர் ஒரு சிலர் கடல் அருகிலுஞ் சென்றுள பெருமணல் உலகிலும் வைகி வாழலாயினர். ஆதியில் கழிக்கரையிடத்து நெய்தல் என்னும் செடி செழித்து இது வளர்ந்திருந்தமையால் இந்நிலப்பகுதியை நெய்தலாக கூறினர். இந்நிலத்து வாழ்ந்த மாந்தர் உழா உழத்தியராய் உப்பு விளைவித்தும், மீன் பிடித்தும் மரக்கலம் உய்த்து தம் வாழ்க்கையை கடத்தினர்.
மேற்குறித்த இந்நால்வகை நிலங்களுள் முல்லை என்பதும் நிலங்களின் இடையே வளம் குன்றிய பகுதியும் உளவாயின. இதனுள் பாலையென்னும் மரம் நன்றே வளர்ந்தமையால் இது பாலை யெனப்பட்டது. வாழும் மக்கள் வில்லும் அம்பும் கருவியாகக் கொண்டு வேட்டமாடி விலங்கு ஊன் மிசைந்து வாழ்ந்தனர்.
ஆகவே பண்டைத் தமிழ்மக்கள் வாழ்ந்த நிலப்பகுதி ஐந்தும் அங்கு வளரும் மரஞ்செடிகொடி வகையது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப் பெயர் பெறலாயின என்பது தெளிவாம்.
முன்னாளில் வான்றோய் மலையிடத்து ஆன்ற ஒரே மக்களாய் இருந்த தமிழ்மக்கள் நாளடைவில் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியினால் அவர்கள் குன்றவர், ஆயர்,உழவர், பரதவர், மறவர் என ஐந்து குழுவினராகப் பிரிந்து விட்டனர். இவர்களுள் முல்லை மருத மக்களிடையே தான் ஆறில் பெரிய நாகரிகம் தோன்றியது என்னலாம். தண் பாலும், அறிவாலும், ஆற்றலாலும், முயற்சித் திறத்தாலும் சிறந்தோரெல்லாம் முறையே அந்தணர், அறிவர், சத்ரியர், வணிகர் எனப் பிற்காலத்துத் திணை மக்களின்
இனகரங்களில் உறைந்து வாழ்வராயினர்.