பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்

பாக்களும், கொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், இப்பொழுது அச்சிடப்பெற்று வெளிவந்து விட்டன. இதன் பயனாய்ச் சில ஆண்டுகளாக நம் நாட்டில் தமிழ்ப்பற்ற மிகுந்து அவற்றைக் கற்றுப் புலமை பெறவேண்டும் என்ற வேட்கையுடையவர்களாய் விளங்குகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களும் தமிழருடைய பண்பாட்டினையும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் கற்பதற்குக் கருவியான நால்கள், சங்க நால்களே எனவும், அதையே தமிழாது தனிப்பெருஞ் செல்வமெனவும், அறிந்தவர்களாய் அந்நூற் பயிற்சி பெறுவதில் முனைந்துள்ளனர். இவ்வேட்கையின் பயனாய்த் தமிழ்நாட்டு இளைஞர்களும் ஆசிரியர்களும் அறிஞர்களும் எழுதும் தனித்தமிழ்க் கட்டுரைகளை ஏந்தி, நாளிதழ்களும் வார இதழ்களும் மாத இதழ்களும் நாளுக்குநாள் பல்கி வெளிவகுகின்றன. இந்த இதழ்களும் ஊர்கடோறும் நகரங்கடோறும் நிறுவப்பெற்று அவை முத்தமிழ் புத்தகம் புரிகின்றன. தமிழ்இசை இயக்கம் வலுத்து கற்பனை அளித்து வருகின்றது.

நம் நாடு, தன்னுரிமை பெற்ற பின்னர் ஆங்கிலப் பட்டதாரிகளான தமிழர்களும் இப்போது தாய்மொழி பயிறுச்சியில் சிறப்பான மனவெழுச்சியும் விழிப்பும் கொண்டு, ஆங்கில அரசியல் காலத்தில், தாங்கள் தமிழராக இருந்தும் தமிழ்மொழியில் பேசுவதும் எழுதுவதும் இழிவானவை எனக் கருதித் தாய்மொழிப் பற்று பின்னர் அதற்கு வருந்திக் கழிவிரக்கம் கொண்டு அதற்காகத் தமிழ் நூல்களைப் பயில்வதிலும் மேடைகளில் தமிழ்மொழியில் பேசுவதிலும் பெருவிருப்பம் கொண்டவர்களாய் விளங்குகின்றார்கள். ஆகவே, நம் நாடு தன்னுரிமை பெற்ற ஒரு புரட்சியில் நம் தமிழ்மொழி தற்போது ஒரு மறுமலர்ச்சியுற்று விளங்குகின்றதென்றும் மிகவும் ஏக்கழுத்தம் கொள்ளலாம். இவ்வாறு இன்றுள்ள புத்துணர்ச்சியிலும் இன்னும் ஒரு சிலர் தென்னுல்களின் நன்னயம் உணராது, பிற்காலக்