பக்கம்:ஐந்திணை வளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஐந்திணை வளம் 'தலைவியதுமனையறமாண்பினது செவ்வியை விளக்கும் சிறந்த செய்யுள் இது. மகனையும் மறந்து போன தலைவனின் குடும்பப்பற்றை இகழ்ந்து உரைத்து நொந்து கொண்டதும் இதுவாகும்.' f 14. அனைத்தும் உளேன் - தலைமைகன்பரத்தையை விரும்பியவனாகத்தலைவியைப் பிரிந்து, பரத்தையர் சேரியில் தங்கிவிடுபவன் ஆகின்றான். தலைவனின் பிரிவினாலே தலைவி அடைந்தவருத்தமோ மிகவும் பெரிதாயிருந்தது. தன்னை மறந்த வேதனையுடன், தனக்கு உரியவனான தலைவன் பரத்தை ஒருத்திபால் இன்புற்று ஒழுகிவருகின்ற அந்த நிலையினை அவளாற் சகிக்கவே முடியவில்லை. அதனை நினைக்கநினைக்க அவளது துயரமும் கவலையும் பொங்கிப் பெருகிமிகுந்தன. தலைவியின் உடலும் அதனால் மெலிந்தது. அவள் உள்ளத்தின் கரைகடந்த காதற்பாசம் எல்லாம், கரை கடந்த கவலைத் துயரமாகி வருத்தத் தொடங்கியது. அவளுடைய நிலையைக் கண்டாள் அவளுடைய ஆருயிர்த் தோழி. அவளுடைய உள்ளமும் அத்னால் துயரப்படலாயிற்று. ‘எப்படியும் தலைவனையும் தலைவியையும் மீளவும் ஒன்றுபடுத்தி, அவர்களது இன்ப நல்வாழ்வினை மலரச் செய்வதற்கு நினைக்கின்றாள் அவள். அதனால் தலைவிபாற் சென்று, தலைவனின் வரவினை விரும்பியவளாக இப்படிக் கூறுகின்றாள், - "தோழி வளஞ்சிறந்த வயல்களைக் கொண்ட ஊருக்கு உரியவன் நம் தலைவன். மாயமொழிகளைக் கூறி அவன் மாதர்களை மயக்குதலையும் செய்திருப்பவன்.” ‘அத்தகைய மாயவுரைகளால் அறிவிழந்த மாதர்கள் தங்களது சக்கரம் போன்ற மோதிரமணிந்தகைகளால் அவனை வளைத்துத் தழுவியும் கிடப்பார்கள்: 'அங்ங்னம் அவரால் வளைத்துக் கொள்ளப் படுதலினின்று தப்பி, இடையிட்டு என்றாவது அவன் நம்பால் வருவான் ஆகில், நின்வாழ்நாட்களுள் அவனை இனிமேல் என்றும் பிரிய நினையாதபடியாக, யான் சேர்த்து விடுவேன். அதனைச் செய்வேனானால், அனைத்துச் செல்வங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/102&oldid=761782" இலிருந்து மீள்விக்கப்பட்டது