பக்கம்:ஐந்திணை வளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் a 2^ 99 மென்ற கவலை அவளைத் தடுக்கின்றது. சொல்லாமல் இருந்தாலும், அவன் வரைதலிலே மனஞ் செல்லாதவனாக இருக்கின்றான். இந்த நிலையிலே, தன் தோழிபால் தன் நிலையைச் சொல்லி வருந்துவாள் போலப் பேசுகின்றாள் தலைவி. - "தோழி! என்னுடைய வாழ்வுதான் என்னாகுமோ? அறியேனடி? தலைவராகிய அவரிடத்தும் நம்மை வரைந்து மணந்துகொள்ளல் வேண்டுமென்கின்ற நன்மைப்பாடுஇல்லை. நம் அன்னையிடத்தும், களவு வெளிப்பட்டதனாலே முன்போல் நாம் அவரைச் சந்தித்து இன்புறுதற்கு வாய்ப்பளிக்கின்ற நன்மைப்பாடு இல்லாமற் போயிற்று” - “பொன்போன்ற மலர்களைப் பூத்துள்ள புன்னைமரங்கள் நிரம்பிய அழகிய கடற்கானற் சோலைகளை உடையவன் நம் சேர்ப்பன். அவனுக்கு, நம்மை வரையாது வாடுதற்கு விட்டிருத்தல் தான் தகுதியுடைது ஆகுமோ? ஆகாதன்றோ? 'அதனால், நின்னையன்றி வேறு துணை இல்லை என்று நீ என் நிலையைத் தலைவருக்குச் சொல்வாயாக' தலைவி உரைத்தது கேட்ட தலைவன், அவளைத் தெளிவித்து, விரைவில் வரைந்து மணந்துகொள்வதற்கு உறுதி பூண்டுசெல்வான் என்பது இதன் முடிபாகும். என்னைகொல் தோழி? அவர்கண்ணும் நன்கில்லை அன்னை முகனும் அதுவாகும்-பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல தில்லென் றுரை. 'பொன்மலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பள் தன் வாழ்வு மலர்தற்கும் உதவவேண்டும் என்கின்ற குறிப்பினை அறிந்து இன்புறுக 3. நாணுவரென்று பெயர்ந்தாள் களவு வாழ்விலே, தலைவன் தலைவியர் இரவு வேளையிலே சந்தித்து இன்புற்று வருகின்ற காலம் தலைவியின் இல்லத்தவரின் காவலும் கடுமையாகின்றது. தலைவன் வரும் வழியின் ஏதமும் மிகுதியாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/107&oldid=761787" இலிருந்து மீள்விக்கப்பட்டது