பக்கம்:ஐந்திணை வளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 / - ஐந்திணை வளம் ஒரு நாள் இரவிலே, தலைவி பறவையொலி கேட்டுத் தலைவனின் தேர் வந்ததெனக் கருதி வந்தவள், தலைவனைக் காணாமையாலும், அரவத்தால் பாக்கத்தவர் தன் உறவினை அறிதற்கு நேரின் அலரெழுதலை நினைத்ததனாலும், மீளவும் தன் இல்லத்திற்கே திரும்பிச் சென்று விடுகின்றாள். அவளுடன் வந்த தோழிமட்டும், ஒருக்கால் தலைவன் அங்கே வந்தால் செய்தியைத் தெரிவித்துத் தெளிவு செய்யும் பொருட்டாக அவ்விடத்தேயே இருக்கின்றாள். தலைவி சென்றதன் பின்னர், சற்று நேரத்தில் தலைவனும் வந்து விடுகின்றான். அவன் ஒருசார் ஒதுங்கியிருக்கத், தோழி அவனைக் கண்டு, தலைவி வந்து ஏமாந்து மீண்டு போயின நிலைமையை உரைக்கின்றாள். வேளைந்த காதணிகளை உடையவள் தலைமகள், அவள் கடற்கானற் சோலையிலே எழுந்த பறவைவகளின் ஒலியினைக் கேட்டாள். கேட்டவள், அதனை நின் தேர்வரவினை அறிவிக்கும் குதிரைகளின் மணியொலி என்றே கருதினாள். 'அலைகளாலும் காற்றாலும் இடப்பெற்ற மணல் மேடுகளை உடையது அகற்சி பொருந்திய இந்தக் கடற்கரைச் சோலை. இதற்குரிய தலைமகனானநின்னது விரைந்துசெல்லும் குதிரையின் மணியொலியே கானற்சோலையில் எழுந்த அரவம் என்று கருதிய அவளும், நின்னைக் காணும் ஆசையினாலே இங்குவந்து, நின்னைக் காணாமல் தன் பிழையாகக் கருதிய தன்மைக்கு வருந்தியவளாகினாள்'. 'சிறு குடியிருப்பினராகிய பரதவர்கள், ஏற்பட்ட அந்த ஒலியானது தம் மகளது காதலனின் தேர்வரவின் ஒலியே என்று அவளைப் போன்றே கருதினராயின், தம் மகளின் ஒழுக்கங் குறித்துநாணங்கொள்வரன்றோ இதனை நினைந்ததும், அவள் விரைந்து, தன் வீட்டிற்கு ஏகினாள்.' 'தலைவனே! உங்கள் இரவுக்குறியின் சந்திப்பு இவ்வாறாயிற்று. நின்னைப் பிரிந்து அவள் வாழ்தல் இலள். இல்லிலிருந்து வாடி நலிந்திருக்கும் அவளது மனத்துயரை அகற்றுவாயாக! அவளை முறையாக வரைந்து மணந்து இல்லறம் பேணுவாயாக’ என்று சொல்கின்றாள் தோழி இடுமணல் எக்கர் அகன்கானற் சேர்ப்பன் கடுமான் மணியரவம் என்று--கொடுங்குழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/108&oldid=761788" இலிருந்து மீள்விக்கப்பட்டது