பக்கம்:ஐந்திணை வளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 101 புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர் உள்ளரவம் நாணுவர் என்று. * 'சிறுகுடியர் உள்ளரவம் நாணுவர் என்றே பெயர்ந்தாள்; இல்லெனிற் பெயர்கின்ற தன்மையள் அல்லள் என்று கூறும் தோழி, அதனால் தலைவியது இற்செறிப்பின் கடுமையினையும் தலைவனுக்கு உணர்த்துகின்றனள். 'தேரொலி குறித்த இட்த்திற்கு வந்ததும் நின்றுவிடும்; புள்ளொலி அப்படி நிற்பதில்லை; அதனால் வீட்டவர் துயிலெழுந்து, தம் மகளைக் காணாது கவலையுறுவர், தேடியும் நாணமுற்றும் நலிவர். இதனால் அவள் பெரிதும்துன்புறுவாள். ஆகவே, அவளை விரையவந்து மணந்து கொள்வாயாக’ என நயமுடன் அறிவுறுத்துகின்றாள் தோழி. 4. கடல் துஞ்சாதது தலைவன் தலைவியரிடையே களவுறவு மலிந்திருந்த காலம் மாறிவிட்டது. தலைவியின் வீட்டார் அவளது உறவிலே ஐயுற்றவராகி, அவளை வீட்டைவிட்டு வெளியே செல்லலாகா தெனத் தடுத்துக் காவலும் இட்டுவிட்டனர். இரவுப் பொழுதிலே, அனைவரும் துயின்றபின்னர், யாரும் அறியாமற் சென்று, கானற்சோலையிலே காதலனுடன் கலந்துகூடி வந்ததுங்கூட இப்பொழுது நின்று விட்டது. தலைவியின் வேதனை பெருகி அவளை மிகவும் நலிவடையச் செய்ய, அவள் தன் ஒழுக்கத்தை வாய் விட்டுச் சொல்லவியலாதும், தன் மேனிக்கண் நிகழும் மாற்றங்களை மறைக்க வியலாதும் இடர்ப்படுகின்றாள். ஒருநாள் இரவிலே கண்ணுறக்கமும் கொள்ள மாட்டாதவளாக, அவள், தன்னுடைய காதலனை நினைந்து புலம்பிக்கொண்டிருக்கின்றாள். அவளுடைய ஆருயிர்த்தோழி அவளது களவுறவினை அறிந்தவளாதலோடு, அவளுக்குப் பலகாலும் உசாவுதுணையாகவும் விளங்கியவள். தலைவியின் கரை கடந்த துயரத்தைக் கண்டு கலக்கமுற்றவளாக, அவளும், அவளருகே வேதனையுடன் வெதும்பிக் கொண்டிருக்கின்றாள். நள்ளிரவு நேரத்தின் செறிந்த இருளும் அமைதியும் பாக்கத்திடமெங்கணும் நிலவியிருக்கின்றன. ஊரும் உறக்கத்திலே ஆழ்ந்ததாக அனைத்தையும் மறந்து அயர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/109&oldid=761789" இலிருந்து மீள்விக்கப்பட்டது