பக்கம்:ஐந்திணை வளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 103 அவனுடைய தொழிற்பாங்கே காரணமாக இருந்தது. நாவாய் கொண்டு தன்னொத்தவர் பலருடன் வேற்று நாட்டிற்குச் சென்றிருந்தவன் அவன். தன் ஊர்க்கு கருதியவனாக அவர்கள் வழக்கமாகக் கூடியிருக்கும் தாழைகள் சூழ்ந்த கானற் சோலையிடத்தை நாடிச்செல்கின்றான். பெரிதாகிய இடையீட்டினாலே துன்பத்தைச் சுமந்து சுமந்து, ஒருவித விரக்தி நிலையினை அடைந்துவிட்டிருந்தாள் தலைவி. அவனுடைய செலவினைப் பற்றி அறியாளாகவே, நாள்தோறும் தாங்கள் கூடும் குறியிடத்திற்குச் செல்வதும் அவனைக் காணாது வருந்தி இல்லிற்கு மீள்வதும் அவளுடைய வழக்கமாயிருந்தது. மேலும், அவர்களது உறவு களவின்கண் நிகழ்ந்ததாதலின், அவளால் தன் வேதனை மிகுதியை வெளிக்காட்டிப் புலம்புதற்கும் இயலவில்லை. உள்ளே அடக்கவும் அடங்காது, வெளியே விடவும் இயலாத நிலையில், காமவேட்கை கனன்று கனன்று அவளை வதைத்தது. அன்றும் கானற்சோலைக்கு வந்தவள்,நின்ற தலைவனைக் கண்டாள். கண்டதும், அவள் உள்ளத்தே காமநினைவு தலையெடுக்கவில்லை. தன்னைப்பிரிந்து போன அவனது கொடுஞ்செயலே முன்னின்றது. அதனால், கண்டும் காணாதவளைப் போலத்திரும்பிவிட்டாள். இல்லிடத்தே வந்ததும், அவளுடைய மனம் அவளை வதைக்கத் தொடங்கியது. ஆசையெழுந்து அலைக்கழிக்க முற்பட்டது.தன்செயலை நினைந்துவருந்தவும் தொடங்கினாள். தானே புலம்புதலையும் மேற்கொண்டாள். அவளுடைய அளவிறந்த மனநிலையினைக் காட்டும் அரியதொரு செய்யுளாக இது அமைந்துள்ளது. அவளுடைய பெரிதான காமக்கனலையும், அதனையும் மேற்கொண்டு நின்ற குடிமையின் சிறப்பினையும் நாம் இதன்கண்காணுகின்றோம். கண்திரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப் பண்டங்கொள் நாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானலுட் கண்டேன் எனத்தெளிந்தேன் நின்ற உணர்விலா தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/111&oldid=761792" இலிருந்து மீள்விக்கப்பட்டது