பக்கம்:ஐந்திணை வளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன், 105 உரைக்கின்றாள். அவர்களும் தம்மகளுக்கு ஏற்றவன் ஒருவனை ஆராய்ந்து அவனுக்கே அவளை மனமுடிப்பதென்றமுடியினைச் செய்கின்றனர். . தலைவியோ, அதனைக் கேட்டதும் உளம் நடுங்கத் துயரத்தால் சோர்கின்றாள். கற்பு நெறியினைத் திண்மையாகப் பேணும். இயல்பினள் அவள். அதனால் தன் களவுக் காதலனையன்றிப்பிறனை மனப்பதற்கு இசையவே மாட்டாள். ஆனால், பெற்றோர் முடிபினை நேரடியாகவே எதிர்ப்பதும் இயலாது. ஆகவே, அவள் செவிலித்தாயிடம் தன்னுடைய காதல் உறவினைக் கூறி அறத்தொடு நிற்கின்றாள். முதலிற் சினந்தாலும்,மகளின் நல்வாழ்விலே கருத்துக்கொண்டசெவிலி, அவ்வாறே அவளை அவள் காதலனுக்கு மனமுடித்து விடுவதாகக் கூறிப் பெற்றோர் ஏற்பாடு செய்ய நினைத்த மணமகனை வேண்டாமென விலக்கித்தடுத்து விடுகின்றாள். “நின் களவு உறவினை என்னால் ஏற்க முடியாது என்றாலும், நீ அவனையே மணப்பது தான் அறம் என்பதனை அறிகின்றேன். ஆகவே,நின் காதலனைவிரைவிலே வந்துபெண் கேடபதற்கான செயலைச்செய்வதற்குச் சொல்வாயாக அவன் வந்ததும்,பிறவற்றையானே முன்னின்று முடித்துவிடுகின்றேன் என்றும் கூறுகின்றாள். - வளர்ப்புத் தாயின் அன்பிற்கு எல்லையே கிடையாது. அதனை அறிந்த தலைவி, பெரிதும் அகமகிழ்வுடன் தன் தோழி மூலமாகக் காதலனுக்குச் செய்தி சொல்லிவிடுகின்றாள். விரைவிலே ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிய தலைவன், கூறியபடி எதனையும் செய்தானில்லை. அதனால், தலைவியின் கலக்கத்தைக் காட்டிலும் செவிலியின் கலக்கமே மிகுதியாகின்றது. தன் மகளான தலைவியின் தோழியை அருகே அழைத்து, 'தலைவியின் காதலனை அறிவாயே, அவன் எப்படிப்பட்டவன்? சொன்னதை விரையச் செய்பவனாகத் தெரியவில்லையே? என்று, கவலையுடன் கேட்கின்றாள். செவிலித்தாயின் கவலையை உணர்ந்த தோழி, தலைவன் ஒருபோதும் தலைவியைக் கைவிடமாட்டான்' என்று மிகவும் நயமாகக் கூறி, அவளது கவலையைப் போக்குகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/113&oldid=761794" இலிருந்து மீள்விக்கப்பட்டது