பக்கம்:ஐந்திணை வளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 109 இதனை அவன் உணரானோ? உணர்ந்தும், நம் அழகின் உண்மையும் அழிவும் அவன் கைக்குள் அகப்பட்டதனைத்தனது இழிதகைமையாற் கொண்டதென உணராது, தன் ஆண்மையாற் கொண்டதென எண்ணினானோ? பண்அமைந்த தேர்மேல் வருகின்ற அவன் செருக்குத்தான் என்னே? இப்படியெல்லாம் தலைவனின் பிரிந்து மறந்த கொடுந்தன்மையைச் சுட்டியுரைத்துப்பேசுகின்றாள் தோழி. இவற்றால், தலைவனின் உள்ளத்தே, விரைவில் தலைவியை மணந்து பிரியாத இல்லற நல்வாழ்விலே திளைக்க வேண்டுமென்னும் நினைவு எழுதல் உறுதியாகும். ஆண்மையாளனாகிய அவன், தன்னை உணர்வான்; காமத்தின் நிலையினாலே கடமையைக் கருதாதிருந்த அவன், கடமையிலே உறுதிப்பட்டுநிற்பவனாவான் என்பதும் இப்பேச்சின் பயனாக அமைந்து சிறக்கும். இதனால், தலைவன் தலைவியரின் நல்வாழ்வும் புகழுக்குரியதாகி உயரும். 8. அன்றிலே உரையாய். தலைவியை வரைந்து கொள்ளுதல்தான் தன்னுடைய ஆண்மைக்குத் தகுதியானது என்பதனையும், அதுவே தங்களது இருவருடைய வாழ்விற்கும் நிலையான இன்பத்தைத் தருவதாயிருக்கும் என்பதனையும் தலைவன் உணர்ந்து விடுகின்றான். உணர்ந்தபோது, காமவேட்கையிற் சென்றிருந்த அவன் உள்ளம், வரைவதற்கான பொருளினைத் தேடிவருதல் வேண்டுமென்கின்ற ஆண்மைச் செயலின்பாற் சென்று உறுதிப்படுகின்றது. அவன், அதனைத் தலைவிக்கு உரைத்தவனாக, அவளைப் பிரியாமற் பிரிந்து பொருள் தேடிவருவதற்கும் சென்று விட்டான். தலைவன் பொருளோடு வந்து தன்னை மணந்து இன்புறுத்துவது தனக்குப்புகழையும் நிலைத்த கற்பு வாழ்வையும் தருவதெனத் தலைவி அறிவாள். எனினும், அவனைப் பிரிந்து, அவன் அருகிலில்லாத தனிமையோடு வாழ்தல் அவளைப் பெரிதும் வருத்துகின்றது. நாட்கள் செல்லச்செல்ல, அவனைப் பிரிந்திருக்கும் அந்த நினைவே உள்ளத்துள் நிறைந்துவிடத் தன்னை எரிக்கும் காம வெம்மையினால், அவள் பெரிதும் தளர்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/117&oldid=761798" இலிருந்து மீள்விக்கப்பட்டது