பக்கம்:ஐந்திணை வளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஐந்திணை வளம் நெற்றியில் மூன்றாவதாகிய ஒரு கண்ணினைக்கொண்ட தலையினையுடைய பெருமான் விநாயகன். அண்டத்தையேதன் வடிவமாக உடையவனும் அவன். அனைத்துக்கும் மூலமாக அமைந்தவனும் அவன். நஞ்சு பொருந்திய கழுத்தினனான சிவபெருமான் பெற்றெடுத்த யானை முகவனும் அவன். அவன்தான் நமக்குத் துன்பம் வராமற்படிக்குக் காக்கக் கூடியவன். அவனையே நாம்துணைகொள்ளல் வேண்டும். அவனைத் தொழுது போற்றி வேண்டினாற் போதும், அருட்கடலான அவன் நமக்குத் தவறாது அருள்பாலிப்பான். அப்போது, நாம் எண்ணும் பொருள்கள் எல்லாவற்றையுமே செவ்வையாக முடித்துவிட அவன் நமக்கு உதவி செய்வான். அத்துடன், இவ்வுலகிற் பொருந்தியுள்ள கலைகள் அனைத்தையும் நமக்குத்தந்தும் அவன் உதவுவான். இந்த நம்பிக்கையோடு ஆனைமுகவனை வழிபட்டுப் போற்றுகின்றனர் ஆசிரியர். செய்யுள், அவருடைய நம்பிக்கையின் உறுதிப்பாட்டுடன்கம்பீரமாகஅமைந்திருக்கிறது. எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு நண்ணும் கலையனைத்தும் நல்குமால்- - - கண்ணுதலின் முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர் கண்டத்தான் ஈன்ற களிறு. A. நாம் பெறுவதற்கு எண்ணுகின்ற பொருள்கள் எல்லாவற்றையும், இனிதாக வந்தடையுமாறு முடிவுபெறச் செய்து உதவுபவன் ஆனைமுகன். அத்துடன், இவ்வுலகத்தே பொருந்தியிருக்கும் கலைகள் அனைத்தையும் நமக்கு ஒருங்கே தந்து அருள்பவனும் அவன். இதனால்,நாம் எடுத்துக்கொண்டசெயல் எண்ணியபடி முடியுமோமுடியாதோஎன்று கவலைப்படவேண்டியதுமில்லை. அதனைமுடிக்கும்ஆற்றல்நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ என்று நாம்தளர்ச்சிகொள்ளவேண்டியதுமில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆனைமுகவனை வேண்டிப் பணிவதுதான். பிறவற்றை அவனே கவனித்துக் கொள்வான். இந்த உறுதியோடு செய்யுள் இலங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/12&oldid=761801" இலிருந்து மீள்விக்கப்பட்டது