பக்கம்:ஐந்திணை வளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 f ஐந்திணை வளம் உரைத்ததனை மேலே பார்த்தோம். தோழியின் அத்தகைய ஆறுதல் உரைகளும், தலைவியின் பிரிவினாலே கொண்ட துயரத்தைத் தணிவிக்கும் வலியற்றனவாகி விடுகின்றன. அவள், அவனையே நினைந்து, அவன் வருதலையே வேண்டி அதே நினைவாகச் செயலும் சிந்தையும் இழந்துதுடித்திருக்கிறாள். இந்த நிலையிலே ஒருநாள், தோழியுடன் கடற்கரைப் பகுதிகளில் உலவி வந்தாலாவது தன் வேதனையை மறக்க முடியாதா என்று கருதி, அவளுடன் செல்கின்றவள், தலைவனுடன் வழக்கமாகக் கூடியிருக்கும் கானற் சோலைக்கு வந்ததும் செயலற்று நின்றுவிடுகின்றாள். அவளுடைய நினைவுகள் தங்களது கழிந்த கால இன்பத்தை நோக்கித் தாவுகின்றன. அந்த இடத்தின் ஒவ்வொரு பகுதியும் இன்ப நினைவுகளை எழுப்பிவிட, அவற்றையெல்லாம் இழந்துநிற்கும் தன்னுடைய நிலை அவளைப் பெரிதும் வருத்துகின்றது. அதனைக் கண்ட தோழி, 'ஏனடி! இப்படி எதையெல்லாமோ நினைத்துச்சோர்கின்றாய் அவன்வருவான்; வந்து நின்னை வரைந்து மணந்தும் கொள்வான்; அதன் பின் அவனோடு பிரியாது கூடியிருக்கவும் போகின்றாய்; அந்த வருங்காலத்தைய இன்பநினைவுகளிலே நின் மனத்தைச் செலுத்திஅமைதிகாணக் கூடாதோ?" என்கின்றாள். இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டே வரும் பொழுது, ஆளரவம் கேட்டலால் அஞ்சிய கடற்பறவைகள், தாங்கள் தங்கியிருந்த இடங்களினின்றும் ஆரவாரத்துடன் எழுகின்றன. அவற்றைக் காணும் தலைவியின் உள்ளம், முன்னரும் அப்படி அவை பலகாலும் எழுந்து பறக்க அந்தக் களவுக் காலத்தை நோக்கிச் செல்லுகின்றது. முன்னெல்லாம், அப்படி அவை பறப்பதனையும் இன்பமாகக் கண்டவள், இப்பொழுது அதனையும் வெறுத்து உரைக்கத் தொடங்குகின்றாள். 'தோழி' 'கடற்கரைச் சோலையிடத்தே வாழ்கின்ற இந்த நாரைகள் நம் நிலைமையை அறியா போலும்? 'துள்ளி விளையாடும் சுறாமீன் தொகுதியாகிய கூட்டமானது கலங்கும்படியாக அவற்றின் பால் மோதி, அவற்றைக் கரையிடத்தே வீசுகின்ற அலைகளையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/120&oldid=761802" இலிருந்து மீள்விக்கப்பட்டது