பக்கம்:ஐந்திணை வளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 115 உணங்கப்போட்டு, அதற்குக் காவலும் அமைப்பர்; அந்தக் காவலையும் கடந்து பறவையினம் உணங்கலைக் கவர்ந்துபோம். இதனைக் கூறுகின்ற தோழி, அந்தப் பறவைகளைப் போன்ற இயல்பினை உடையவன் தலைவன் என்றும் மறைமுகமாகப்பழிக்கின்றனள். கவருகின்ற பறவைகளைக் காணின், பரதவர் கடிந்து ஒட்டுவதுடன் கவண் எறிந்து ஊறுபடுத்தவும் முனைவர், தம் உரிமையைப் பேணுதலிலே உறுதியுடைய அவர்கள் அதனைச் செய்யாதிரார். ஆகவேதான்,'நீகவர்ந்துபோயின அழகினைத் தந்துவிடு என்று கேட்டுவிடுவோம்; இன்றேல்பரதவர்அவனை விடுவதிலர் என்பதனையும் எடுத்துக் கூறுவோம்’ என்ற கருத்தினை உள்ளடக்கி இப்படிக் கூறுகின்றாள் தோழி. இதனைச் சிறையகத்திருந்து கேட்கும் தலைவன், தன் உறவினாலே தலைவிக்கு வந்துறும் இடர்ப்பாடுகள் பலவற்றையும் கருதுவான் என்பதும், கருதுபவன் அவற்றை நீக்குவதற்கு முயல்வான் என்பதும் அந்த முயற்சியால் விரைய மணம்பெறும் வாய்ப்பு உருவாகும் என்பதும், தோழியின் உள்ளெண்ணமாகும். இந்த உள்ளெண்ணம் மிகவும் நுட்பமாகப் பொதியப் பெற்று, தம்மை நொந்து கொள்வது போன்றவொரு தன்மையோடு திகழ்கின்றது.இச்செய்யுளில், 11. தோள் பசலையாயின்று கடற்கரை நாட்டுத் தலைமகன் ஒருவன், அந்நாட்டைச் சேர்ந்தவளான கன்னி ஒருத்தியுடன் களவிலே உறவாடிச் சில காலம் கழித்தபின், அவளை அறவே மறந்து, தன் தொழிலிலே மனஞ் செலுத்துதற்கு ஈடுபட்டுவிட்டான். - தலைவனின் இச் செய்கையினாலே தலைவியின் உடல் நலன் முற்றவும் அழியத் தொடங்கிய கொடுமையினையும், அவள் தன் பழைய பொலிவினை இழந்துபசலை படர்ந்தவளாக நலிகின்ற நிலையினையும் கண்ட தோழி பெரிதும் மனங் கலங்குகின்றாள். தலைவன்பாற்சென்று, தலைவிக்கு அருள் செய்தலை வேண்டுதற்கும்.துணிகின்றாள். கடற்கரைப் பாங்கிலே திரிந்து கொண்டிருந்த தலைவனைக் கண்டு வாழ்த்தி நின்ற தோழியை, அவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/123&oldid=761805" இலிருந்து மீள்விக்கப்பட்டது