பக்கம்:ஐந்திணை வளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஐந்தினை வளம் விருப்புடன் வரவேற்றுக்களிப்புடன் வாழ்த்துகின்றான். அவன் மனம் தலைவிபாற் செல்லுகின்றது. தோழி நின் தலைவி நலமோ? எனவும் விசாரிக்கின்றான். அவனுடைய விசாரிப்பைக் கேட்டதும், தோழியின் உள்ளம், அவனுடைய செயலினை நினைந்து கொதிப்படை கின்றது. அதோ, மணல் மேட்டின்கண் செல்லுகின்ற நண்டுகளைப் பார் என்கின்றாள், அவனும் பார்க்கின்றான். இணையிணையாகக் களிப்புடன் ஆடித்திரிகின்ற அவற்றின் செயலிலே அவனுடைய உள்ளமும் ஈடுபடுகின்றது. அவற்றைப் பார்த்தபடியே, இவற்றின்பால் என்ன புதுமை கண்டனையோ? இவை தம்முடைய இயல்பின்படிதான்மணல் மேட்டிலே விளையாடுகின்றன என்கிறான் தலைவன். ‘அவை தம் இயல்பின்படி விளையாடுவது உண்மையே! ஆனால், அவை தம் துணையுடன் விளையாடுகின்றனவே அல்லாமல், நின்னைப்போலத் தலைவியைத் தனித்துத் துயருறுதற்கு விட்டுவிட்டுத் திரிவன அல்லவே? என்கிறாள் தோழி. தலைவன் திடுக்கிடுகின்றான். நண்டின்பால் விளங்கும் பிரிவறியாத் துணைமை உணர்வு கூடத் தன்பால் இல்லையெனத்தோழி சுட்டிக்காட்டி உரைத்ததனை நினைந்து நாணித் தலைகவிழ்கின்றான். அவனது இயல்பான தகைமை உணர்வு, அவனது செயலினை எள்ளிநகையாடுகின்றது. 'ஏதோ நிகழ்ந்துவிட்டது. இனி அங்ங்ணம்நிகழாது பேணுவேன். நீதான் தலைவியைத் தெளிவித்தல் வேண்டும். அவள் எப்படியிருக்கிறாள்? என்று குறையிரந்தும் நிற்கின்றான். 'அவள் அழகினைத்தான் நீ கவர்ந்து விட்டனையே? அவள் எப்படி இருப்பாள்? அவளுடையதோள்கள் இந்நாளில் பசலையாற்படரப்பெற்றவனாகத்தம் பொலிவிழந்து சோர்ந்து போயுள்ளன என்கின்றாள் தோழி. இதன்மேல், தலைவன் தலைவியை நாடிச் செல்லும் உணர்வினாலே உந்தப்பட்டுத் தோழியின் உதவியோடு அவளுடைய கூட்டத்தைப் பெறுவதற்கு வேண்டிநிற்கின்றான். தோழியின் நயஞ்செறிந்த சொல்லாடலைக் கொண்டு திகழ்கின்ற செய்யுள் இது. உரையாடலின் நுட்பமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/124&oldid=761806" இலிருந்து மீள்விக்கப்பட்டது