பக்கம்:ஐந்திணை வளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஐந்திணை வளம் கயவன் அல்லன், விரைவிலே தன்னை மணந்து கொள்வான்; களவுக் காலத்துச் சிறுபிரிவும் கூட அப்போது இல்லாமற் போகும்; அவனுடன் பிரிவினை அறியாதபடி கூடியின்புற்று மகிழலாம்; ஆன்றோர் போற்றும் இல்லறநெறியில் நல்லறந் திகழச் செய்து புகழ் பெறலாம்; ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆட்சிக்கு ஒர் ஆணுமாகப் பெற்றுப்பெருமிதம் அடையலாம்; இப்படியெல்லாம் அவள் கட்டி மகிழ்ந்த கனவுக் கோட்டை களைச் சொல்லால் எடுத்துரைக்க முடியாது. அந்த இன்பக் கனவுகளிலேயே திளைத்திருந்த அவள், அவன் தன்னை நாடி வருதற்கும் மறந்தான் என்றபோது கலங்கினாள். கனவுகளின் சிதைவோடு அவளுடைய கன்னிமையும் அழிந்தது. கண்டவர் பழிதூற்றும்அவலநிலைக்குத்தானும் உள்ளாகநேருமோ என்ற கவலையும் அவள்பால் மிகுந்தது. அவள் நடை தளர்ந்தது; அவள் உடலும் சோர்ந்தது கண்களோபெயலைத்தொடங்கின. அப்போழுது, நாரையொன்று தன் அலகிடத்தே சிறுமீன் ஒன்றைக் கெளவியபடி பறந்து வந்து, அவளிருந்த இடத்தின் மேலாக இருந்த மரத்தின் மேல் அமருகின்றது. மரத்தின் பாலிருந்த கூட்டினின்றும் அதன் குஞ்சுகள் இரையினை விரும்பியவையாய் ஆரவாரிக்கின்றன. தலைவியின் மனமும்,தலைவனோடுதான் வாழவிரும்பிய இன்பமான இல்லற வாழ்வினையும், அதன்கண் தானொரு புதல்வனைப் பெற்றுப் பெருமிதத்தோடு வரைந்து கொண்டு தனக்கு அந்த நல்லதொரு வாழ்வினை அளிக்க முயலாது, பொருளாசையால் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனின் செயலை நினைந்து, அவள் சுடுமூச்சு எறிகின்றவளாகச் சொல்லுகின்றாள், சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய் இறுமென் குரலநின் பிள்ளைகட் கேயாகி நெறிநீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற நெறியறிதி மீன்றபு நீ. “சிறு மீனை அலகிடையே பற்றிக்கொண்டு வருகின்ற சிவந்த இறகுகளையுடைய நாரையே! பசியால் வருந்துதலை யுடைய மென்குரலினைக் கொண்டு நின் குஞ்சுகளையே கருதினாயாகி மீன்களை நீ கொல்லுகின்றாய், அங்ங்னம் கொல்லும் நீதான், அலைந்து செல்லும் நீரினையுடைய கழிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/126&oldid=761808" இலிருந்து மீள்விக்கப்பட்டது