பக்கம்:ஐந்திணை வளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 119 கால்களைக் கொண்ட சேர்ப்பன், என்னைப் பிரிந்து சென்ற வழியினை நன்றாகத் தெரிவாய் அல்லவோ? தெரிந்தால் என் நிலையை அவனுக்குச் சொல்லுக!' என்பது இதன் பொருள். மீன்தருதலின்பொருட்டாகப்பறந்துசெல்பவையாதலின், நீ சேர்ப்பன் சென்ற நெறியறிதி' எனக் கூறியதாகவும் கொள்ளலாம். - பெண்மையின் பெருங்கனவை அழகுறச் சித்தரிக்கின்ற அரியதோர் ஓவியம் இந்தச் செய்யுள். அந்தக் கனவு இன்பமான இல்லறக் கடமைக்கு எத்துணை சிறந்த அடிப்படையாக மிளிர்வது என்பதனையும் இச் செய்யுள் நமக்குப் புலப்படுத்துகின்றது. நாரைகட்குக் கூடத் தம்முடைய உறவிலே உறுதி யிருக்கின்றது. தாம் கூடியது இன்புறுதற்கு என்று மட்டுமே கருதியவையாய், அவை தலைவனைப் போலத் தம் ஆசை தீர்ந்ததும் துணையை மறந்து பிரிந்து போய்விடவில்லை. தமக்குப் பிறக்கும் குஞ்சுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி, அதற்காகக் கூடுகளையும் கட்டிக்கொண்டு, கடமைப் பொறுப்பிலே திளைக்கின்றன. முட்டைகளை இட்டபின், அவற்றைப் பேணிக் காத்துவருகின்றன. சின்னஞ்சிறு குஞ்சுகளைக் கண்டதும், சிந்தை குளிர்ந்து மகிழ்ச்சியோடும் ஆரவாரிக்கின்றன. குஞ்சுகள் பெரியவைகளாக ஆகின்ற காலம் வரையும் தம் வாயிலே சிறுசிறு மீன்களைக் கெளவிக்கொண்டு வந்து அன்போடு ஊட்டுகின்றன. பசியோடு கூச்சலிடும் குஞ்சுகள் பாசத்தோடு இரைகொணரும் நாரை! தலைவியின் எண்ணப் பறவை சிறகடித்துப் பறக்கின்றது. தன் மகனுக்குத் தானும் சோறுட்டிக் களிப்புறுகின்ற அந்த இன்ப நாளை நோக்கிச் செல்லுகின்றது. 'அவன் நம்மை மறந்தான்! இனி இவை எல்லாம் நிகழ்வதேது? நம் அழிவுதான் இனி உறுதியாகும். அவள் உள்ளம் நெருப்பாகக் கனலுகின்றது. அவள் புலம்புகின்றாள். அந்தப்புலம்பலின் குரலோடு விளங்குகின்றது இந்தப்பாடல். பெண்மை எப்போதுமே உயர்ந்த நோக்கத்தைக் கொண்டது. இனத்தை வளர்க்கின்ற கடமையுணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/127&oldid=761809" இலிருந்து மீள்விக்கப்பட்டது