பக்கம்:ஐந்திணை வளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 5 இப்படி உதவுகின்றவன் யாவன்? இவன் யாவனென்று தெரிந்தால், நாமும் கவலையற்று இருக்கலாமே? அதனையும் செய்யுள் உரைக்கின்றது. அவன் நெற்றிக்கண்ணை உடைய தலையினைக் கொண்டவன். "நெற்றிக்கண்ணினைத் திறந்து நோக்கினாலே எதிரிடும் இடையூறுகள் சாம்பராகி அழிந்துபோம். அதனால் அவனைத் துணைக்கொள்வது, நமக்கு அளவற்ற வலிமையாளனின் துணையைக் கொண்டது போன்ற மன நிம்மதியைத் தரும். - அவன் அண்டத்தான்; பிரணவ ரூபனாகிய பெருமான் அவன். அதனால், அனைத்தும் அவனுள் அடங்குவன. ஆகவே, அவனால் இயலாததும் இல்லை; அவ்ன் அறியாததும் இல்லை. அவன் மூலத்தான். ஆதி பரம்பொருளே அவன்தான். அதனால் அவனைத்தவிர நமக்கு உறுதுணை வேறு எதுவுமே இல்லை. - அவன், ஆலஞ்சேர் கண்டத்தான் ஈன்ற களிறு, பிறரை அழிக்கின்ற ஆலத்தைத் தானுண்டு, பிறரைக்காத்த அருளாளன் சிவபிரான். அந்தநஞ்சின் கொடுமை கூட அவனைச்சேர்ந்ததும் குன்றிப் போகின்றது. கழுத்திலே நீலக்கறையாக அமைந்து, அவனுக்கு அது அழகும் செய்கிறது. அவன் ஈன்ற களிறுதான் இவன். இதனால், அவனுடைய குடிப்பெருமையும் விளங்கும். கருணைக் கடலான தகப்பனுக்குப் பிறந்த மகன் கருணை யற்றவனாகவா இருப்பான்? மகன் தந்தையைப் போன்ற வனாகவேதான் கருணையாளனாகவேதான் திகழ்வான். இதனால் ஆனைமுகவனைக் காட்டிலும், நமக்கு உதவுகின்ற ஆற்றலும் அருளும் உடையவர் வேறு யாருமில்லை; அவனே உதவும் தகுதியுடையவன்; அவனே உதவும் கருணை கொண்டவன்; அவனைப் போற்றி அவனருளையே வேண்டுவோம். இவ்வாறு அறிவுறுத்துகின்றது செய்யுள். இந்தச் செய்யுளின் அமைதி, இதனைச் செய்தவர், பிற்காலத்தவராக இருக்கலாம் என்ற ஐயத்தை தருகின்றது. எனினும் சிறப்பாக பொருட்செறிவுடன் திகழ்வதால் நாம் இதனை மனங்கொள்வோம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/13&oldid=761812" இலிருந்து மீள்விக்கப்பட்டது