பக்கம்:ஐந்திணை வளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிக்ன் 7 செயலும்,தன்குடியது.பெருமையும், தன்னுடைய ஆண்மையும் அனைத்துமே தோற்றான். அவற்றையெல்லாம் இழந்து, அந்தக் குமரியின் நினைவிலேயே தன்னை மறந்தான். அந்தக் குமரியின் நிலையும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது.அவன் யார்? எந்த ஊரவன்? யார் பெற்ற மகன்? இப்படிப் பட்ட எண்ணங்கள் அவளிடம் எழவே இல்லை. அவனைக் கண்டதும், தான்.அவனுக்கு உரியவள்; அவனே தன் நாயகன்;. இந்த ஒரே நினைவுதான் அவளிடையே நிரம்பிவழிந்தது. இப்படித் தொடங்கிய சந்திப்பு, படிப்படியே வளர்ந்து களவுறவாகப் பரிணமித்தது. இருவரும் தனித்துக்கூடிக்கரவாக இன்புற்றனர். இந்தக் கூட்டம் எளிதில் வாய்ப்பது மிகவும் கடினமாக இருக்கவே, தல்ைவன், தலைவியுடைய உயிர்த் தோழியின் உதவியை நாடினான். அவளும், தலைவனைத் தன் தலைவிக்கு உரியவனாதற்கு வேண்டிய தகுதிகள் எல்லாம் கெண்டவனாதலைத் தெரிந்தபின், அவனுக்கு ஒத்தாசையாக இருக்கலானாள். தோழியின் உதவி கிடைத்த பின்னர், காதலர்களின் சந்திப்பும் ஒரளவுக்கு எளிதாகவே நிகழ்ந்துவரலாயிற்று. அவர்களுடைய அளவிறந்த அன்பினையும், காதற் பெருக்கினையும் தோழி அறிந்தவள். அதனால், அவளுடைய உள்ளமும் மிகவும் மகிழலாயிற்று. இப்படிக் தொடர்ந்து நடந்துகொண்டேபோன களவு உறவுக்கும், இடையில் சிக்கல் ஏற்படத் தொடங்கிற்று. தினைக்கதிரின் அறுவடைக்குரிய நாள் நெருங்க நெருங்கத் தோழியின் மனத்திலே கவலைதோன்றிற்று, நாளுக்குநாள் அது வளரலுமாயிற்று. தலைவன் தலைவியர் இருவரும் உலகை மறந்து ஒழுகினர். அவர்கட்கு அவர்களுடைய ஒருமைப் பாட்டைத் தவிர வேறு நினைவே எழவில்லை. தலைவனுடைய உள்ளமும் அந்தக் களவு உறவிற்கு அடுத்தபடியாகத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய திருமண முயற்சிகளைப் பற்றி எண்ணவில்லை; தலைவியும் அதைப்பற்றி நினைக்கவில்லை. “தலைவிக்கு அவன் எல்லாவகையிலுமே பொருத்தமானவன்தான். இருந்தாலும், அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/15&oldid=761814" இலிருந்து மீள்விக்கப்பட்டது