பக்கம்:ஐந்திணை வளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - ஐந்திணை வளம் திருமணம் நடந்தால் தானே நமக்கு நிம்மதி. நாளைக்கோ, இரண்டு நாட்களிலோ, தினைக் கதிரைக் கொய்துவிட்டனர் என்றால்,அதன்பின்அவர்கள் சந்திப்பது இயலாததாகிவிடுமே! தலைவியை வீட்டோடுவைத்துவிடுவார்களே! அவனால் அங்கு வரவும் முடியாது வந்தாலும் அவளைச் சந்திக்க இயலாது. அடக்க முடியாத காதல் வேகத்தினாலே அவனும் ஒருக்கால் வந்துவிடத் தலைவியும் பிரிவினது துயரைப் பொறுக்க மாட்டாதவளாகி அவனைச்சென்று கூடுவதற்குத்துடித்தனளா னால்,அப்போதுஎத்தகையவிபரீதமானவிளைவுகள் ஏற்படும்” இப்படிஎல்லாம் தோழி எண்ணலானாள். "இன்று இவளைச் சந்திக்க வாய்ப்பு எளிதாக இருக்கிறதனால் தொடர்ந்துவருகின்ற இவன்,நாளைக்கு இவள் வீட்டிலே காப்புடன் இருக்கின்றதனை உணர்ந்து வராமலேயே இருந்துவிட்டால்'இப்படிநினைத்ததும்,தோழியின் உள்ளம் மிகவும் பதறியது. அவர்களுடைய உறவினை நிலையான ஒரு திருமண உறவாக்கித் தன் கவலைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிட அவள் முடிவு செய்தாள். இந்த முடிவுக்குப்பின்,அவளிடத்தே புதியதொரு ஊக்கமும் தெளிவும் பிறந்தது. வழக்கம் போன்றே அன்றும் தலைவன் வந்தான். தலைவியை அவன்பாற் சேர்த்தபின் ஒதுங்கி நின்ற தோழி, அவன் தன் ஊருக்குச் செல்லுவதற்கு மீண்டபோது, அவனை எதிர்கொண்டு வாழ்த்தினாள். தன் கருத்தையும் நயமாகத் தெரிவிக்கின்றாள். தான்சொல்லக் கருதியதை வெளிப்படையாகச் சொல்லாமல்குறிப்பாக,இனிமையுடன் உணர்த்துகின்றாள். “ஒரு தினைப்புனத்திலே பசுமையான கதிர்கள் செழுமையாகத் தோன்றியுள்ளன. அவரைக் கொடிகள் அத் தினைப் பயிரின்பால் படர்ந்து விளங்குகின்றன. பசுமையோடு விளங்கும் அந்தப் புனத்தைக் கண்டது ஒரு கவரிமான். அது இளமையின் முறுக்குடன் விளங்கிய மலைமானும் ஆகும். அதன் கண்கள் அப்போது ஆசையினாலேமலர்ந்தன. மெள்ளக் காவலர் அறியாதே புனத்துட் புகுந்த தினைப்பயிரை அது மேயத்தொடங்கிற்று” - “இப்படிக் கவரி மடமான் மேய்கின்ற, படர்ந்த மலைச்சாரல்களைக் கொண்ட, கானக நாடனே" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/16&oldid=761815" இலிருந்து மீள்விக்கப்பட்டது