பக்கம்:ஐந்திணை வளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O - ஐந்திணை வளம் 2. வாடல் மறந்தன! இந்தக் காலத்திலே, பெற்றோர்கள், தம் பெண்னுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேடுவதற்கு மிகவும் தொல்லைப் படுகின்றார்கள். ஏற்றவனாக ஒருவன் கிடைத்தால் மட்டும் போதாது, அவனுக்குமாப்பிள்ளைவிலை வேறு தாராளமாகக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. குடும்பங்களின் செல்வ நிலைமைக்கு ஏற்ப இந்த மாப்பிள்ளை விலையும் கூடிக்கொண்டேபோகும். மாப்பிள்ளையின் கல்வி தொழில் முதலிய தகுதிக்கு ஏற்பவும், தொகை உயரும். சில சமயங்களில் இந்த விலை பலவாயிரம் ரூபாய்களாக விளங்குவதும் உண்டு. இதனைத் தடுக்கச் சட்டமும், சான்றோரின் அறிவுரைகளும் எழுந்தன. அவற்றால் ஒருவிதமான பயனும் ஏற்பட்டதாக நம்மால் பெருமைப்பட முடியவில்லை. பணம் இல்லாத காரணத்தால் கிளிபோன்ற கன்னியரையும் மணஞ்செய்து தருவதற்கு ஒரு வழியின்றி வாடுகின்றவர்களைத் தான் நாம் உலகில் காணுகின்றோம். ஆனால், நம் நாட்டின் நிலைமை முன்காலத்திலே இப்படி இருக்கவில்லை. பெண்ணுக்கு முலைவிலை கொடுக்கும் வழக்கமே அந்நாளில் இருந்திருக்கின்றது. சிலரிடையே, இன்றைக்கும் இப்படி ஒரு வழக்கம் இருப்பதாகநண்பர்கள் கூறுகின்றனர். இந்த முலைவிலை என்பது ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? இதனைப்பற்றி எதனையும் நம்மால் தெளிவாக ஆராய்ந்து உரைக்க முடியவில்லை. பழைய கால நாகரிகத்தில் ஆணும் பெண்ணும் உழைப்பாளிகளாகவே விளங்கினர். ஒரு குடும்பத்தில் பிறந்த பெண், அந்தக் குடும்பத்திற்கு உதவுபவளாக இருப்பாள். குடும்பத்தின் பலவகையான வேலைகளில் அவளும் கலந்துகொண்டு உழைத்து வருவாள். திருமணத்திற்குப் பின் அவள் தன் கணவனுடன் போய்விட நேர்வதனால், அவள் பிறந்த குடும்பத்திற்கு உழைப்பவருள் ஒருவர்குறைவர். இதனை ஈடுசெய்யவே"முலைவிலை என்று ஒரு தொகையை, அவளைப் பெற்றோருக்குத் தருகின்ற பழக்கம் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கலாம். இப்படி ஏற்பட்ட பழக்கம் காலப்போக்கில் ஒரு சமூக மரபாகி நிலை பெற்றிருத்தலும் கூடும். இதனால், முலைவிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/18&oldid=761817" இலிருந்து மீள்விக்கப்பட்டது