பக்கம்:ஐந்திணை வளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 11 கொடுப்பதற்கான பொருள் தேடுகின்ற முயற்சியொன்றும், இளைஞர்களுடைய வாழ்வில் அக்காலத்தே ஏற்பட்டிருந்தது. நம் முன்னோர்கள் மிகவும் நுட்பமாகச் சமூகவியலை வகுத்து, அதனை மேற்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். ஆண்மகன் ஒருவன், இந்த முலைவிலைக்கு உரிய பொருளைத் தானே ஈட்டிக் கொணர்தல்தான் சிறப்பாக அந்நாளிலே மதிக்கப் பெற்றது. பெற்றோர்கள் கொடுப்பதனை எந்த இளைஞனும் ஏற்கமாட்டான். அது ஆண்மைக்குரிய செயலன்று. இண்ளஞனான அவன், ஒருத்தியை மணந்து அவளோடு குடும்பம் நடத்த வேண்டும் என்றால், அந்தக் குடும்பத்தின் நல்வாழ்விற்கு வேண்டிய பொருளினை ஈட்டுவதற்கான திறமை அவனிடம் இருக்க வேண்டாமா? அவனுடைய இந்தத் திறமையைச் சோதிப்பதற்கு ஒரு நல்ல வழியாகவும் இந்த மரபு அந்நாளிலே உதவிற்று. களவிலே உறவாடிக் களித்த தன்னுடைய காதலியை மணந்து இல்லறம் பேணுவதற்கு விழைகின்றான் காதலன். அவள்பால் பிரியா விடைபெற்றுப் பிரிந்து, வேண்டிய பொருளினைச்சம்பாதித்துவருவதற்குவேற்றுநாடுநோக்கியும் போய்விடுகின்றான். * - - 'தன் காதலன், பொருளோடு விரையவந்து தன்னை வரைந்து மணந்து கொள்ளப் போகின்றான்' என்ற பூரிப்புத் தலைவிக்கு ஒருபுறம் இருந்தாலும்,அவனைப்பிரியவேண்டுமே என்ற வருத்தமும் இல்லாமல் இல்லை. பிரிவுத் துயரினைப் பொறுத்துக் கொள்ள முயன்றாலும், அது நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே போயிற்று. இந்த நிலையிலே காலமும் வறிதே கழிந்துகொண்டுபோகின்றது. ஒரு நாள், தலைவனுடைய குடும்பத்தைச் சார்ந்த பெரியோர்கள், தலைவியை மணம் பேசும் பொருட்டாகத் தலைவியது இல்லத்திற்கு வருகின்றனர், தலைவியின் வீட்டாரைச் சந்தித்துத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கின்றனர். உரிய முலைவிலைப்பொருளையும் கொணர்ந்து அவர்களிடம் தருகின்றனர். தலைவியின் பெற்றோரும் உறவினரும் அந்தத் திருமண உறவைப்பற்றிய பலவகையானதன்மைகளையும் ஆராய்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/19&oldid=761818" இலிருந்து மீள்விக்கப்பட்டது