பக்கம்:ஐந்திணை வளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12— ஐந்திணை வளம் அதன் பின்னர், தலைவியை அவனுக்கு மணஞ்செய்து தருவதற்கும் இசைகின்றனர். இந்த நிலையினாலே தலைவின் களிப்புக் கரைபுரண்டு பெருகுகின்றது. அவளுடைய உள்ளக் களிப்போடு உடலும் ஒருவிதப் புதுப் பொலிவினைப் பெறுகின்றது. அந்த மகிழ்ச்சியோடு விளங்கும் அவளைக் கண்டதும், தோழிக்கு உற்சாகம் பிறக்கிறது. - o “ஏனடீ நின் காதலன் இன்னமும் வந்து நின்னைத் தழுவவில்லையே! அதற்குள்ளாகத் திடீரென நின் மேனியிற் புதுப்பொலிவு தோன்றுவது ஏன்? நின்னுடைய தோள்களின் வாட்டமெல்லாம் போயினவிடம் தெரியாதபடி மறைந்ததும் எதனால்? அந்த இரகசியத்தை எனக்கும் சொல்லடி” என்று அவள் கேட்கின்றாள். - "அப்படி எதுவும் இல்லையே” என்று முதலில் சொன்னாலும், தலைவியின் உள்ளத்து உவகையானது பொங்கி வழிகின்றது. கண்களிலே புதிய ஒளியெழுந்து வீசத் தொடங்குகின்றது. இதழ்க் கடையிலே இன்பநகை நெளிந்தோடுகின்றது. நாடன் நயமுடையன் என்பதனால், தோள் வாடல் மறந்தன என்கிறாள் அவள். இந்தக் காட்சி மூவாதியரது உள்ளத்தினைக் கவர்ந்தது, அவர், கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்து வானின் அருவி ததும்பக் கவினிய நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும் வாடல் மறந்தன தோள். என்று பாடுகின்றார். “மிகவுயரத்தே நின்றும் வீழ்ந்து வருகின்ற அருவி நீரானது,தோட்டமாகிய தினைப்புனத்தின் கண்ணே உளவான அகிற்கட்டைகளைச் சுமந்துகொண்டு வருகிறதாம். எங்கணும் அந்த வெள்ளம் கரைபுரண்டு செல்கிறதாம். அதனால் காடெல்லாம் அழகுமிகுந்து விளங்கா நிற்குமாம்” “இத்தகைய கானத்திற்குரிய தலைவன் ೨೧ಿ. அவன் சொன்ன சொல் தவறாத நற்பண்பினை உடையவன். இதனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/20&oldid=761819" இலிருந்து மீள்விக்கப்பட்டது