பக்கம்:ஐந்திணை வளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 13 அவன் பிரிந்து போயினாலும், தலைவியின் தோள்கள் தாம் வாடுதலை மறந்தே இருந்தனவாம்." இப்படி உரைக்கின்றாள் தலைவி. இதன்கண் அமைந்த சிறப்பை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும். 3. அலையும் அலைபோயிற்று ஒரு கன்னிப் பெண் வீட்டிலே இருந்தால், அந்த வீட்டாருக்குத் தூக்கமே பிடிக்காது. அவளுக்கு ஏற்ப ஓர் இளைஞனைக் கண்டு பிடித்து, அவளுடைய திருமணத்தைச் சிறப்பாக நடத்தவேண்டுமே என்ற கவலைதான் அவர்களிடம் நிலவும். - கன்னியர் காளையரைக் கண்டிருக்கலாம். தக்கவன் ஒருவனைக் காதலித்தும் இருக்கலாம். ஆனால்,அவர்கள் அந்தக் காதல் உறவினாலேயே குடும்பத்தவராகி விட இயலாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரும்,நம் தமிழர் சமுதாயத்திலே இந்த நிலைதான் இருந்தது. இன்றும் பெரும்பாலும் இதே நிலைமைதான் இருந்து வருகின்றது. பெற்றோர்களின் இசைவுடன், ஊர் அறிய, உறவினர் கூடி வாழ்த்தத் திருமணம் நிகழ்தல் வேண்டும். திருமண நிகழ்விற்குப் பின்னர்தான், அவர்களைக் கணவன் மனைவியராகச் சமூகம் ஏற்றுக்கொள்ளும். ஆகவே, காதல் என்ற உறவு சமூகத்தின் முத்திரையோடு திருமணமாக உறுதி பெறாத வரை, களவு உறவாகவே, பிறர் அறிந்தால் பழித்துப் போசும் உறவாகவே, அந்த நாளிலும் இருந்திருக்கிறது; இன்றும் இருந்துவருகின்றது. ஆனால், இயற்கை எப்போதும் பெரிதான ஆற்றல் கொண்டது. அது சமூகக் கட்டுத்திட்டங்களைக் கொஞ்சமும் பொருட்படுத்துவதே இல்லை. இளைஞரையும் கன்னியரையும் தூண்டி விட்டுக் காதலிக்கச் செய்து, அது வேடிக்கை பார்க்கின்றது. - இப்படி,இயற்கையின் பிடியிலே சிக்கிக்காதல்நோயிலே உழன்று வந்தாள் ஒரு நங்கை, காதல் மலர்ந்த பின் வீட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/21&oldid=761820" இலிருந்து மீள்விக்கப்பட்டது