பக்கம்:ஐந்திணை வளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஐந்திணை வளம் கண்டிப்பும் வளர்ந்தது. அவளுடைய போக்கிலே மாறுதலைக் கண்ட தாய், அவளை வீட்டை விட்டுச் செல்லாதபடியும் தடுத்துவிட்டாள். அவளுடைய நிலைமை தர்ம சங்கடமான ஒரு நிலைமை ஆயிற்று. காதல் நோய் ஒருபுறம் அவளை வருத்துகின்றது. அதனை வெளியே சொல்லமுடியாது, நிறையும் நாணமும் வேலியிட்டுவிட, அவள் செய்வதறியாது திகைத்து, நாளுக்கு நாள் நலிகின்றாள். அன்னை அறிந்தால், அதனால் வரும் விபரீதங்களை நினைத்துப்பார்க்கவே அவளால் முடியவில்லை. காதலனைச் சந்திப்பதும் மிக மிகக் கடினமாக இருந்தது. இந்த நிலையிலே அவள் ஏக்கத்தால் தளர்ந்து சுடுமூச்சு எறிந்தவளாக மெலிவுற்றுவந்தாள். மகளின் நிலையினைக் கண்டதும் தாய் பதைபதைக் கிறாள். திருமண ஆசை வந்துவிட்டது என்பதை உணர்ந்த அவள் விரைவிலே தன் மகளுக்குத் திருமணத்தை நடத்திவிட முயலுகின்றாள். தக்க வரனைத் தேடியும் அலைகின்றாள். w இப்படிப்பட்ட நிலைமையிலேதான், தலைவியுடைய காதலனின் வீட்டார் வந்து, அவனுக்கு அவளைத் திருமணஞ் செய்து தருமாறு, தலைவியின் பெற்றொரிடம் கேட்கின்றனர். அவர்களும், அந்த இளைஞனைத் தங்கள் மகளுக்கு ஏற்றவன் என்றறிந்ததும், அந்த உறவிற்கு இசைந்துவிடத் திருமணமும் உறுதியாகின்றது. தலைவியின் தோழிக்கு இந்த முடிவைக் கேட்டதும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரள்கின்றது, தலைவியிடத்தே சென்று,இந்தநல்லசெய்தியைச்சொல்லுவதற்காக ஓடோடியும் வருகின்றாள். 'ஏனடீ! இப்படி விழுந்தடித்துக்கொண்டு ஒடி வருகின்றாய்? என்று தலைவி, தன் தோழியைக் கேட்கின்றாள். அதற்கு அவள், நிகழ்ந்ததை உரைக்கும் முறையிலே அமைந்த நயமிகுந்த செய்யுள் இது. - இலையடர் தண்குளவி ஏய்த பொதும்பில் குலையுடைக் காந்தள் இனவண்டிமிரும் வரையக நாடனும் வந்தான் மற்றன்னை அலையும் அலைபோயிற் றென்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/22&oldid=761821" இலிருந்து மீள்விக்கப்பட்டது