பக்கம்:ஐந்திணை வளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 17 மந்தியானது வந்து, காட்டுப் பசுவினது பால்மடியை வருடும்; அப்போது அந்தப் பசுவும், தன் கன்றிற்குப்போல அன்புபட்டதாகி,அதற்கும்பாலைச்சுரக்கும்; அதனைக்குடித்து மந்தியும் தன் வேட்கை தீரும். 'இப்படிப்பட்ட அழகிய மலைநாட்டிற்கு உரியவனாகிய நம் தலைவனை, யாமாக ஒருபோதுமே பிரிய மாட்டோம்: ஆதலிற்பழித்தல் வேண்டா என்கின்றாள். தலைவின் இந்தச்சொற்களைக்கேட்டதும் தலைவனது உடல் புல்லரிக்கின்றது. தலைவிக்குத் தன்பாலிருக்கும் காதல் ஆழத்தையும்,நம்பிக்கையையும் அவன் புரிந்துகொள்கின்றான். அவளைக் கவலைப்பட வைத்த தன் பிரிவுச் செயலைக் கருதித் தனக்குள் நொந்து கொள்கின்றான். அவளை முறைப்படி விரைவிலே மணந்து கொள்ள வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளவும்.துணிகின்றான். ‘யாமாப்பிரிவது இலேம்' என்பதற்கு,"யாம் உளேமாகப் பிரிவதிலம்’ என்று பொருள் உரைப்பார்கள். அதுவும் பொருத்தமான ஒரு உரையேயாகும். தலைவியின் உள்ளச் செவ்வி, மூவாதியரை மிகவும் கவர்கின்றது. அவர் பாடுகின்றார்: மன்றத்துப் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்து ஆமா காக்கும் அணிலை நாடனை நாமாப் பிரிவதிலம். ‘மந்தி முலை வருட ஆமா சுரக்கும்’ என்றாற்போல் அந்நாட்டிற்குரிய தலைவனும் மிகவும் கருணையாளன் ஆவான் என்பதும், தான் மனமுவந்து காதலித்தவளை ஒரு போதும் கைவிட மாட்டான் எனவும், தலைவிகொண்ட மனவுறுதி இதனாற் புலனாகும். இந்தச் செய்யுளை அளி சிறந்தவழித் தலைவி கூறியது' என்று இளம்பூரணர் சொல்வர்; அதனையும் நாம் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். 'அளி சிறந்தலாவது தலைவனது கூட்டத்தால் தலைவி இன்பநலத்தினைத் துய்த்துக் களிகொள்ளல். ஆமா காட்டுப்பசு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/25&oldid=761824" இலிருந்து மீள்விக்கப்பட்டது