பக்கம்:ஐந்திணை வளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஐந்திணை வளம் கேண்மை நயந்திகழும் என்னும் என் நெஞ்சு. சான்றவர் கேண்மை சிதைவின்றாய்,ஊன்றி வலியாகிப்பின்னும் பயக்கும்’ என்றெல்லாம் உரைக்கின்றதலைவியின் உளப்பாங்கினைநாமும் வியந்துபோற்றுதல் வேண்டும். இந்த மனவுறுதி பெண்ணிடத்து நிலைபெற்று விடுமானால், அங்கேதான் இல்லறவாழ்வு இனிமையின் ஏற்றத்துடன் பொலிவுறும் என்பதனையும், நாம் மனங்கொள்ளல் வேண்டும். 6. இன்னுயிர் தாங்கும் மருந்து தலைவன் தலைவியரின் களவொழுக்கம்நாள் தவறாமல் நடந்து வருகின்றது. இன்பத்தின் எக்களிப்பினாலே, அவர்களிருவரும், உலக நினைவை இழந்தவராகி, அந்தச் சிந்தனையை அறவே மறந்து ஒன்றுபட்டுப், பித்தாக நடந்து வருகின்றனர். இவர்களுடைய இந்த நிலையைக் கண்டு, பின் விளைவுகளை நினைந்து, பெரிதும் கவலை கொள்ளுகின்றாள் தலைவியின் தோழி. g எப்படியும் தலைவனைக் கண்டு, விரைவிலேயே தலைவியை வரைந்துவந்து மணந்துகொள்வதற்குத்துண்டுதல் வேண்டுமென்று தோழி கருதுகின்றாள். அதனால், அன்று தலைவியைக் கூடியவனாக, அந்த இன்பச் செழுமையிலே திளைத்தவனாகப், பிரியா விடை பெற்றுப் பிரிந்து தன் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தலைவனை எதிரே வந்து நின்று கண்டு, தன் கருத்தை வெளியிடுகின்றாள். வெளிப்படையாகச் சொல்லாமல், மிகவும் நயமாக அவன் உள்ளம் புண்பட்டு விடாத படியும், அதேசமயம் அது வரைவு வேட்கையினைக் கொள்ளும்படியும், தோழி மிகவும் திறமையாகவே தன் பேச்சைநிகழ்த்துகின்றாள். “பொன்போன்ற பூங்கொத்துக்களை உடைய வேங்கை மரங்கள் மணத்தை நிறைத்துக் கொண்டிருக்கும் குளிர்ந்த சோலைகளையுடைய மலைநாடனே' என்று, தலைவனை விளிக்கின்றாள். வேங்கை பூக்கின்ற காலம் மணம் பேசுதற்குரிய நற்காலமாயிற்றே; நின் காதலியை நீயும் மணந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/28&oldid=761827" இலிருந்து மீள்விக்கப்பட்டது