பக்கம்:ஐந்திணை வளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 27 அவன் உறவு நன்மைதருவது என்று அறிந்து யானும் அந்நாளில் தெளிவுகொண்டேன். அவனையும் ஏற்றுக்கொண்டேன். 'அன்று, அவன் காட்டிய பேரன்பாகிய ஒப்பற்ற வொன்று, ஈடு இணையற்றது. அதற்கு ஈடு சொல்லவும் என்னால் இயலாது, அது என்றும் அத்தன்மையதாக மாறாதே இருக்கும். இதனால்நீ ஐயுறுதல் வேண்டா என்கின்றாள். மன்றத்து உறுகல் கருங்கண் முசுவுகளும் குன்றக நாடன் தெளித்த தெளிவினை நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி ஒன்றுமற் றொன்றும் அனைத்து. - தலைவியின் காதலீடுபாட்டையும், அவள் தன்மேற்கொண்டிருந்த உறுதியான பற்றினையும் உணர்ந்த தலைவன், அவளை விரைந்து மணந்து வாழ்தல் வேண்டும் என்றும், பிரியாதிருந்து பேரின்பத்தே திளைக்கச் செய்தல் வேண்டும் மென்றும் உறுதிகொள்ளுகின்றான். மன்றம்-ஊர் மன்றம்; ஊரவர் கூடும் பொதுவான அம்பலம். இதன்கண் பலரும் அமர்ந்திருத்தற்கு ஏற்றபடி கற்கள் வரிசையாக அமைக்கப் பெற்றிருக்கும். அவற்றில் முசுக்கள் குதித்தாடும் என்றதனால் அவ்வூரவர் பெரிதும் அருளுடையவர் என்பதும் விளங்கும். ஆகவே, அருளுடைய ஊரவனாகிய அவனும், அருளுதலினின்றும் பிறழாது, சொன்னபடியே தனக்குத் தண்ணளி செய்து இன்புறுத்துவான் என்று கூறுகின்றாள் தலைவி. 10. வாழ்தல் இலள் தலைவன் தலைவியரின் களவு உறவு தொடர்கின்றது. அது கடிமணமாகி மலர்தலை நாடிய தோழியின் உள்ளம் பெரிதும் கவலையுறுகின்றது. எனினும் இன்பநாட்டத்தினரான அவர்கள், அதனைப் பற்றிச் சிறிதும் கவலையுறாதவராகவே நடந்துவருகின்றனர். தோழிக்கு மனவேதனைமிகுதியாகின்றது. ஒருநாள், தலைமகன் சோலைப்புறமாக வந்து கொண்டிருக்கின்றான். தோழி அவனைச் சந்திக்கின்றாள். அவனுடைய உள்ளத்திலே உறைக்கும்படியாக அவனுக்குத் தன் எண்ணத்தை உரைக்கமுற்படுகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/35&oldid=761835" இலிருந்து மீள்விக்கப்பட்டது