பக்கம்:ஐந்திணை வளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 29 பிரைசம் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல் மரையான் குழவி குளம்பிற் றுகைக்கும் வரையக நாட! வரையாய் வரின்எம் நிரைதொடி வாழ்தல் இலள். 'அவள் வாழாள் ஆகவே, நீ தொடர்ந்து இன்புறுதல் என்பதும் இல்லாமற்போம். கருணையற்றவன்; நம்பினவளைக் கைவிட்டவன் வாய்மை இல்லாதவன் என ஊரும் நின்னைப் பழிக்கும் என்றெல்லாம் தோழியின் பேச்சிலே உள்ளார்ந்த பல எச்சரிக்கைகள் மிளிர்தலையும் நாம் காண்கின்றோம். 11. நெஞ்சு ஊன்றுகோல் தலைவன் வந்து வேலிப்புறத்தே செவ்விநோக்கி நின்றிருப்பதை அறிந்த தோழி, அவனது முயற்சி எல்லாம் களவின்பத்தை அடைதலாகவே இருத்தலையும், இல்லற நெறிநோக்கி ஏகத்தொடங்காததையும் நினைந்து புண்பட்டவளாகத் தலைவியிடம் அவனைப் பழித்துக் கூறுகின்றாள். - தலைவனை விளித்துக் கூறாது, தானே தன் நெஞ்சுக்குக் கூறி நொந்து கொள்ளுகின்றாள் அவள். - 'வேடுவர்களாலே சுட்டுக் கரிக்கப்பெற்றதும், பன்றிகள் உழுது கிண்டியிருப்பதுமான தினைக்கொல்லையுள், ஆண் குரங்குகள் வாழையின் முற்றிய காய்களைப் பழுப்பதற்காக வேண்டிப் புதைத்துவிட்டுப் பின்னர்ப் புதைத்த விடம் தெரியாமல் சோர்ந்து வருந்துகின்ற தன்மையினையுடைய, அருவிகள் தாழ்ந்து வீழ்ந்துகொண்டிருக்கின்ற,மலைநாட்டைச் சேர்ந்தவன் எம் தலைவன். 'அவன், என் தோழியான இவளுக்கு, இந்த நேர்வளையாளுக்கு, நெஞ்சிடத்தே பட்டுத் தைத்த அம்பினைப் போன்றதெளிவான சொற்களைத்தான் சொல்லியிருக்கின்றான். என்கின்றாள் அவள். தலைவன் அந்த உரையைக் கேட்கின்றான். புனத்தை அழித்ததால், இனிப் புனங்காவலுக்குத் தலைவிவரமாட்டாள் என்பதனையும், அதனால் அவளைக் கண்டு இன்புறுதல் இயலாதென்பதனையும் உணர்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/37&oldid=761837" இலிருந்து மீள்விக்கப்பட்டது