பக்கம்:ஐந்திணை வளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 31 அடியினையுடைய மராமரங்கள் நிறைந்த சோலையினிடத்தே, பசிய இலைகளாலுண்டான நிழலினிடத்தே கிட்ந்து உறங்கும். வண்டுகள் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த, அத்தகைய மலைநாட்டினன் நம் தலைவன்! - 'அவனுடைய நட்பானது, அவனைத் தழுவினாரான எம்போல்வார்க்கு என்றும் காப்பினை உடையதே யாகும் என்கின்றாள். - - பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக் கருங்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சாம் சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை பொருந்தினார்க் கேமாப் புடைத்து. 'இருங்களிறு ஐவனம் மாந்திக் கருங்கான் மராஅம் பொழிற் பாசடைத் துஞ்சும்’ என்பதனால், தலைவனது நாட்டு வளமையைக் கூறினாள். மேலும், அந்தக் களிற்றைப் போன்று, தன் வீட்டவர் அறியாமல் தன்னைக் களவிலே கூடி இன்புற்றபின்,அவன் கவலையற்றுத்தன் ஊரிடத்தே உள்ளனன் என்பதையும் குறிப்பாக உணர்த்துகின்றாள். 'சுரும்பிமிர் சோலை மலைநாடன்” எனவே, அவனது தன்மையும், 'சுரும்பினம்போல மலருக்கு மலர் செல்கின்ற தன்மை உடையது போலும் என்பதையும் குறிப்பினாலே கூறுகின்றாள். ‘எனினும், அவனைக் கூடினார் கற்புடைய மகளிராதலின், அவர் அவனையே தமக்குரிய காப்பாகக் கொள்ளும் மனவுறுதி கொண்டவர் எனத் தனது பெண்மைச் செவ்வியினைப் பொருந்தினார்க்கு ஏமம் உடைத்து' என்பதன் மூலம் வலியுறுத்துகின்றாள். இதனைக் கேட்கும் தலைவன், தன்னுடைய கவலையற்ற போக்கிற்கு வருந்தியவனாக விரைவிலே அவளைவேட்டுவந்து மணப்பதிலே கருத்துச் செலுத்துபவனாவான்’ என்பது இதன் பயனாக விளைவதாம். 13. முயங்கினேன் வலித்தான் தலைவன் தலைவியரின் உறவு இதன்பின் தடைப்படுகின்றது. தலைவி இற்செறிக்கப்படுகின்றாள். இரவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/39&oldid=761839" இலிருந்து மீள்விக்கப்பட்டது