பக்கம்:ஐந்திணை வளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 37 ‘அத்தகைய மாலைப்பொழுதிலே, பசுமையான கொடிகளையுடைய முல்லையானது பூத்து மணம் கமழ விளங்குகின்றது. வண்டுகள் அந்தப் பூக்களை நாடிச் சென்று ஒலி செய்கின்றன. . 'இங்ங்னமாகக் கார்காலத்துடனே சுழன்று தோன்றும் வானத்தைக் காண்கின்றேன். காணும் பொழுதிலெல்லாம் என் கண்கள் நீரினோடுங்கூடத்தடுமாற்றமெய்தி வருந்தாநின்றாள். இங்ங்னம் தன் துயரின் மிகுதியைத் தோழியிடம் கூறுகின்றாள், தலைவி. செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால் பைங்கொடிமுல்லை மணங்கமழ-வண்டிமிரக் காரோடு அலமருங் கார்வானம் காண்டொறும் நீரோடு அலமருங் கண். கார்காலம் முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது என்பதனையும், மாலை சிறுபொழுது என்பதனையும், முல்லை பூ என்பதனையும் நினைவிற் கொள்ளல் வேண்டும். வேனிலானின் சினமும் மறைந்தபோது முல்லை பூத்து மணங் கமழ, அதனால் தலைவியின் பிரிவுத்துயரம் பெருகிற்று எனவும், வண்டினம் இமிரவும் அது மேலும் மிகலாயிற்று எனவும் கொள்க. அலமரல்-தடுமாறி வருந்தல் வேனிலும் வெப்பந்தீர்ந்துபோயின, இவ்வேளையிலே என்னுடைய காமவெம்மை தீர்தற்கு வழியில்லையே?’ எனத் தலைவி ஏக்கமுற்றுப்புலம்பினாள் என்க. 2. என்னாதி என்பார் இலர்! 'ஏனடி வீணாக மனத்தை வருத்தி, நின்னை நீயே நலிவித்துக் கொள்கின்றாய். நின் காதலர் நின்னை மறப்பவர் அல்லர். சொன்ன சொல்லினைப்பிறழ்வாரும் அல்லர். விரைய வந்து சேர்வார். அதுவரையும் ஆற்றியிரு’ என்று கூறித் தலைவியைத் தோழி தேற்றித் தெளிவிக்க முயல்கின்றாள். தலைவி மெலிந்த தன் தோள்களை நோக்குகின்றாள். கவலையற்று மெலிவுற்றிருக்கும் தோழியின் தோள்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/45&oldid=761846" இலிருந்து மீள்விக்கப்பட்டது