பக்கம்:ஐந்திணை வளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 39 'குளிர்ந்த நறுமணத்தையுடைய வெண்காந்தள் துடுப்பினைப் போன்ற அரும்புகளை ஈன்றுள்ளன. கார் காலத்தை எதிரேற்று, வானத்தின் உயரத்தே விளங்கும் மேகங்கள் இடித்துமுழக்குகின்றன: - 'இறுக அணைத்துத் தழுவுபவரான காதலர்களைப் பிரிந்திருக்கும் மகளிர்கள் துயருற்று நடுங்கச், சிறுமையுடைய மாலைக்காலமும் வராநின்றது. அது கொலையாளிகளைப் போலவன்றோ வருகின்றது! அதற்கு ஆற்றாத யான் ஏதடி செய்வென்? எங்ங்னம் உய்வேனடி? - தலைவி,இப்படிமாலைக்காலத்தின்வருகையைக் கண்டு புலம்புகின்றாள். தண்ணறுங் கோடல் துடுப்பெடுப்பக் கார்எதிரி விண்ணுயர் வானத்து உருமுரற்றத்-திண்ணிதிற் புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல் வரும். ‘மாலை, கொலையாளிகளைப் போல வரும் என்று உரைக்கும் தலைவியினது மன நிலையினை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போதுதான். இந்தப் பாட்டின் பொருளினை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கோடல்-வெண் காந்தள். 4. உயிர் துடிப்பது போலும்! தோழி, தலைவியின் உண்மையான காதற் பெருக்கினையும், அதன் காரணமாக இப்போதுள்ள பிரிவுத் துயரத்தினைப் பொறுக்கவியலாது படுகின்ற வேதனையையும் நன்றாக அறிந்தவள். எதனைச் சொல்லியும் தலைவியின் உள்ளத்திலே அமைதி சேர்க்க இயலாதென்பதும் அவள் அறியாததன்று. எனினும், அதற்காகத் துடிக்கும் அவளது துயரத்தின் மிகுதியைக் கண்டு வாளாவிருந்து விடுதல் முடிகின்றதா? அதனால்தலைவியைத் தேற்றுகின்ற முறையோடு சில சொற்களைக் கூறுகின்றாள். 'இதோ பார் வானம் மழைபெய்யத் தொடங்குகின்றது. நின் தலைவரும் நின்னை நாடி வந்துவிடப் போகின்றார். அதுவரை ஆற்றியிருக்காமல் இப்படி வருந்தி வருந்தி நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/47&oldid=761848" இலிருந்து மீள்விக்கப்பட்டது