பக்கம்:ஐந்திணை வளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 . - - ஐந்திணை வளம் நினைவுதான் எழுகின்றது. அதனைத் தோழியிடம் உரைக்கின்றாள். . "தோழி” “அரிய கலைமான்களின் கூட்டங்கள் மகிழ்ச்சிபொங்கக் காட்டிடத்தே சுற்றித்திரிகின்றன”. . "கொல்லைகளிலுள்ள, கொடிகள் பிணங்கிக் கிடக்கும் முல்லையும், தளிர்க்கத்தொடங்கியிருக்கிறது.” “கார் காலத்தின் வரவு மானுக்கும் முல்லைக்கும் மகிழ்வைத் தருகின்றது. ஆனால், என் போன்ற மங்கைக்கும் என்னை மணந்து பிரிந்து சென்றுள்ள மணவாளர்க்கும் துன்பத்தையே தருகின்றது. “சிறுமையுடைய மாலையானது,நானும் என் காதலரும் வருத்தமுறும்படியாக, இடித்தலோடு கூடியதாகத் தானும் முகிலுமாக இணைந்துவராநிற்கும்; அப்போது யான் என்னடீ செய்வேன்?” - தலைவியின் வருத்தம், இவ்வாறு துயரச் சொற்களாக வெளிவருகின்றது. - * இனத்த அருங்கலை பொங்கப் புனத்த கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி யானும் அவரும் வருந்தச் சிறுமாலை தானும் புயலும் வரும். ‘மாலை ஒன்று போதாதோ என்னை வருத்துவதற்கு? அது புயலோடும் சேர்ந்து வருவதேன்? என்னை முற்றவும் அழித்துவிடற்கே போலும்? இப்படி நொந்து புலம்புகின்றாள் தலைவி. 7. வாழ்கிற்பார் இல் 'தோழி! நின் வருத்தத்தின் மிகுதியினை யானும் அறிகின்றேன். என்றாலும், காதற்கணவரைப் பிரிந்து ஆற்றியிருந்து, அவர் மீண்டு வந்தபின் சிறப்புறக் குடும்பத்தை நடத்தலாமென்று ஆற்றியிருக்கும் மகளிர், இவ்வுலகில் எவ்வளவோபேர் இருக்கின்றனர். அப்ப்டியிருக்க, நீ, ஏதோ நினக்குமட்டுமே புதிதாக இப்படிஒன்றுநேர்ந்துவிட்டதுபோல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/50&oldid=761852" இலிருந்து மீள்விக்கப்பட்டது